ADVERTISEMENT

திடீரென உயர்ந்த தக்காளி விலை

08:22 PM Jan 18, 2023 | kalaimohan

ADVERTISEMENT


ஈரோடு மார்க்கெட்டில் தக்காளி விலை இன்று அதிகரித்து காணப்பட்டது.

ADVERTISEMENT

ஈரோடு வ .உ. சி. காய்கறி மார்க்கெட்டிற்கு ஒவ்வொரு நாளும் கர்நாடகாவில் இருந்தும் கோலார், ஆந்திரா, தாளவாடி, அனந்தபூர் போன்ற பகுதிகளில் இருந்து 10 லோடு லாரிகளில் 10 டன் தக்காளிகள் விற்பனைக்கு வரும். இதனால் சென்ற வாரமே ஒரு கிலோ தக்காளி ரூபாய் 20-க்கு விற்பனையானது.

இந்நிலையில் கடும் பனிப்பொழிவு தாக்கம் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டு மார்க்கட்டுக்கு விற்பனைக்காக வரும் தக்காளி வரத்தும் குறைந்துள்ளது. இன்று 18 ந் தேதி வ.உ.சி பூங்கா காய்கறி மார்க்கெட்டுக்கு கோலாரிலிருந்து ஒரு டன் தக்காளி மட்டுமே வரத்தாகி இருந்தது. இதனால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ தக்காளி ரூபாய் 40-க்கு விற்பனையானது. தொடர் முகூர்த்தம் இருப்பதால் தக்காளி தேவை அதிகரித்துள்ளது. எனினும் தக்காளி வரத்து குறைவாக இருப்பதால் தக்காளி விலை கிடுகிடுவென உயர்ந்து விட்டது. இன்னும் இரண்டு மூன்று நாட்களுக்கு இதே நிலைமைதான் நீடிக்கும். மேலும் விலை கூடுவதற்கான வாய்ப்பு உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர். வரத்து அதிகமான பிறகு மெல்ல மெல்ல விலை சரிந்து குறையத் தொடங்கும் என தெரிவித்தனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT