ADVERTISEMENT

தூத்துக்குடியில் நிர்மலா சீதாராமன் ஆய்வு ; கனிமொழி, தங்கம் தென்னரசு ஆகியோர் பங்கேற்பு

12:48 PM Dec 26, 2023 | kalaimohan

கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென் மாவட்டங்களில் பல இடங்களில் அண்மையில் கனமழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து மக்கள் தவித்தனர். பல்வேறு இடங்களில் போக்குவரத்து சேவையும் பாதிக்கப்பட்டது.

ADVERTISEMENT

ஏற்கனவே மிக்ஜாம் புயலால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு மாநில அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. தொடர்ந்து மத்திய குழுவும் வருகை தந்து ஆய்வு மேற்கொண்டது. மத்திய அரசு சார்பில் சென்னை வந்த பாதுகாப்புப் படை துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட்டார். அதேபோல் தென்மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கும் தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. மத்தியக் குழுவும் ஆய்வு செய்துவிட்டு சென்றிருந்தது.

ADVERTISEMENT

இந்நிலையில் தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகளை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆய்வு செய்ய இன்று வருகை புரிந்துள்ளார். அவரை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு வரவேற்றார். அதனைத்தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற நிர்மலா சீதாராமன் அங்கு வைக்கப்பட்டிருந்த வெள்ள பாதிப்புகள் தொடர்பான புகைப்படங்களை பார்வையிட்டார். உடன் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், பாஜக இணையமைச்சர் எல்.முருகன் ஆகியோர் உடனிருந்தனர்.

தொடர்ந்து இன்சூரன்ஸ் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் மற்றும் வங்கி அதிகாரிகளுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT