ADVERTISEMENT

தேர்வு முடிவுகளை காண பள்ளிகளில் கூடிய மாணவிகள்! (படங்கள்)

12:39 PM Jul 19, 2021 | lakshmanan@nak…

ADVERTISEMENT

பல்வேறு எதிர்பார்ப்புகள், ஆலோசனைகளுக்கு மத்தியில் இன்று சுமார் 8 லட்சம் மாணவர்களின் 12ஆம் வகுப்பு தேர்வு மதிப்பெண் பட்டியல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை இன்று காலை 11 மணிக்கு தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். மாணவர்கள் அவர்களது பதிவு எண் மற்றும் பிறந்த தேதியைப் பதிவு செய்து மதிப்பெண்களுடன் கூடிய முடிவுகளை www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, dge2.tn.nic.in,dge.tn.gov.in என்ற இணையத்தளங்களில் அறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மாணவர்கள் பள்ளியில் குறிப்பிட்டுள்ள கைப்பேசி எண்ணுக்கு மதிப்பெண்கள் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் www.dge.tn.gov.in, www.dge.tn.nic.in இந்த தளத்தில் ஜூலை 22 முதல் மதிப்பெண் பட்டியலைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 12 ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்கள் முதல்முறையாக தசம எண்களிலும் கணக்கிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சென்னை எழும்பூரில் உள்ள அரசு மாநில பெண்கள் பள்ளியில் தங்களது பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவிகள் நேரில் வந்து பார்த்து சென்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT