ADVERTISEMENT

கிணற்றில் தவறி விழுந்த மாணவன் உயிரிழப்பு: பள்ளியில் கழிப்பறை இல்லாததே காரணம்?

12:34 PM Jul 21, 2018 | rajavel


கடலூர் மாவட்டம் வேப்பூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பூலாம்பாடி கிராமத்தை சேர்ந்த முருகேசன் மகன் சசிபாலன் (வயது 14) 9ஆம் வகுப்பு படித்து வந்தான். பள்ளி நேரத்தில் இயற்கை உபாதை கழிக்க பள்ளிக்கு அருகில் சென்றுள்ளான். அப்போது கிணற்றில் தவறி விழுந்து இறந்துள்ளான் என்று கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெற்றோர்கள் பள்ளி முடிந்து மகன் வரவில்லை என்று தேடி பார்த்து விட்டு வேப்பூர் காவல் நிலைத்தில் புகார் அளித்துள்ளனர். இந்த நிலையில் இரவு எட்டு மணியளவில் மாணவன் கிடந்த கிணற்றின் அருகில் இயற்கை உபாதை கழிக்க சென்றவர்கள் பார்த்துவிட்டு ஊரில் தகவல் சொல்லியுள்ளனர்.


பின்னர் மாணவன் உடலை அடையாளம் கண்டு உடலை கிணற்றிலிருந்து தூக்கியுள்ளனர் . இதுகுறித்து வேப்பூர் போலிசார் விசாரித்து வருகின்றனர். மேலும் இறந்த மாணவன் அவர்கள் வீட்டில் ஒரே பிள்ளை என்பதால் பெற்றோர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. வேப்பூர் அரசு மேல்நிலை பள்ளியில் கழிவரை வசதி இல்லாததே மாணவன் இறப்புக்கு காரணமாகும். பள்ளி மாணவ மாணவியர்களுக்கு இனியாவது கழிவரை கட்டி கொடுக்கப்படுமா?

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT