Skip to main content

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக அனைத்து கல்லூரி மாணவர்கள் போராட்டம்! 

Published on 24/02/2020 | Edited on 24/02/2020

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் கல்விக்கான கட்டணத் தொகையை 225 மடங்கு உயர்த்தியதால் ஏழை, எளிய மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதையடுத்து பல்கலைக்கழக கட்டணக் கொள்ளையைக் கண்டித்து புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் தொடர்ந்து 19 நாட்களாக பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். 


மாணவர்களை கடும் அவதிக்குட்படுத்தி வேடிக்கை பார்க்கும் மத்திய பல்கலைக்கழக நிர்வாகத்தையும், கட்டண உயர்வை கண்டுகொள்ளாமல் அமைதிகாக்கும் ஆளுநரையும், புதுச்சேரி அரசையும் கண்டித்து நடைபெற்று வரும் இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக நாளை (25/02/2020) புதுச்சேரி வருகை தரும் துணை ஜனாதிபதி அவர்களுக்கு கருப்புக்கொடி போராட்டம் நடத்தி அவரது கவனத்தை ஈர்க்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

PUDUCHERRY CENTRAL UNIVERSITY FEE RAISED STUDENTS

இந்நிலையில் மத்திய பல்கலை மாணவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், அவர்களின் கோரிக்கைகளை ஏற்க வலியுறுத்தியும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கல்லூரிகளின் மாணவர்களும் மாநிலம் தழுவிய மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
 

சட்டக் கல்லூரி மாணவர்கள் ராஜா திரையரங்கம் அருகில் மாணவர் கூட்டமைப்பு துணை தலைவர் தமிழ்ச்செல்வன் தலைமையில் சாலை மறியல் போராட்டத்திலும், இந்திராகாந்தி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் இந்திய மாணவர் சங்கம் ஜெயபிரகாஷ் தலைமையிலும்,  தவளக்குப்பம் ராஜீவ் காந்தி அரசு கலைக் கல்லூரியில் மாணவர்கள் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் முருகன் ஷேக் தலைமையிலும், தாகூர் கலைக்கல்லூரி மாணவர் கூட்டமைப்பு துணைச் செயலாளர் தமிழ்வேந்தன் மற்றும் அனைத்திந்திய மாணவர் பெருமன்ற தலைவர் முரளி தலைமையிலும், சமுதாயக் கல்லூரியில் இந்திய தேசிய இளைஞர் முன்னணி கலைப்பிரியன் தலைமையிலும், மோதிலால் நேரு அரசு தொழில்நுட்பக் கல்லூரியில் முத்துக்குமார் மணி தலைமையிலும் வகுப்பு புறக்கணிப்பு போராட்டங்களும் நடைபெற்றன. 

PUDUCHERRY CENTRAL UNIVERSITY FEE RAISED STUDENTS

இந்த போராட்டங்களை அனைத்து மாணவர் மற்றும் இளைஞர் கூட்டு இயக்கத்தின் இந்திய மாணவர் சங்கம், புதுச்சேரி யூனியன் பிரதேச மாணவர் கூட்டமைப்பு, திமுக மாணவர் அணி, அனைத்து இந்திய மாணவர் பெருமன்றம், இந்திய தேசிய இளைஞர் முன்னணி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் உள்ளிட்ட இயக்கங்களை சேர்ந்த மாணவ பிரதிநிதிகள் ஒருங்கிணைத்தனர்.
 

ஒரே நாளில் அனைத்து கல்லூரி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து போராட்டங்களில் ஈடுபட்டது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரத்தில் மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
Higher education guidance program for students in Chidambaram

சிதம்பரம் அரசு நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில்  ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிய  மாணவ மாணவிகளுக்கு  உயர் கல்வி வழிகாட்டல் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்சிக்கு  சிதம்பரம் சார் ஆட்சியர் ராஷ்மிராணி தலைமை தாங்கி மாணவர்கள் மத்தியில் பேசுகையில்  பன்னிரெண்டாம் வகுப்பு  முடித்து  அடுத்து என்ன படிக்கலாம்.  மாணவர்களின் கனவுகளை நினைவாக்கும்  படிப்புகள்  எவை,   உயர்கல்விக்கு செல்ல ஏராளமான உதவித் தொகை வாய்ப்புகள் உள்ளது என்றும்,   தேர்ச்சி பெற்ற அனைத்து  மாணவர்களுக்கும்  உயர் கல்விக்கான  வழிகாட்டுதல்களைத் தமிழக அரசு சிறப்பாகச் செய்து வருகிறது.  சிறந்த வாய்ப்புகளுக்கு எந்தக் கல்லூரியிலும்  சேர்ந்து படிக்கலாம்,  வருங்காலத்தைப் பலப்படுத்த எந்தப் பாடப்பிரிவைத்  தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்து  மாணவர்களிடம் விளக்கி பேசினார்.

Higher education guidance program for students in Chidambaram

இதனைத் தொடர்ந்து மாவட்ட ஆதிதிராவிட  மற்றும் பழங்குடியின நல அலுவலர்  லதா அனைவரையும் வரவேற்றார். மண்டல உதவி இயக்குநர் சுப்பிரமணியன்,  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலர் சரவணகுமார்,  நந்தனார் ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் குகநாதன், குமராட்சி வட்டார வள மைய மேற்பார்வையாளர் இளவரசன்,  ஒருங்கிணைப்பாளர் பூங்குழலி,  பள்ளித்துணை ஆய்வாளர்  வாழ்முனி,  ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இதில் மண்டல ஒருங்கிணைப்பாளர்கள் ரவி, அருள்சங்கு, நந்தனார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராதாகிருஷ்ணன்,  சுவாமி சகஜானந்தா மணி மண்டப ஒருங்கிணைப்பாளர் பாலையா, குமராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பாலமுருகன், உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள  ஆதி திராவிட நலத்துறை   பள்ளிகளின் மாணவ மாணவிகள்  300-க்கும் மேற்பட்டவர்கள்  கலந்து கொண்டு  உயர்கல்வி குறித்து ஆலோசனைகளைப் பெற்றனர்.   இவர்களுக்கு உயர் கல்வி குறித்த விவரங்களை கருத்தாளர் கோபி வழங்கினார். சிதம்பரம் ஆதிதிராவிடர் நலத்துறை தனி வட்டாட்சியர் சுதா அனைவருக்கும் நன்றி கூறினார்.

Next Story

புதுச்சேரி சிறுமி கொலை; விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Puducherry girl incident File charge sheet soon

புதுச்சேரியில் உள்ள சோலை நகரில் கடந்த மார்ச் மாதம் 2 ஆம் தேதி, 5 ஆம் வகுப்பு பயின்று வந்த மாணவி ஆர்த்தி (வயது 9) என்பவர் திடீரென காணாமல் போன நிலையில் ஆர்த்தி அம்பேத்கர் நகர்ப் பகுதியில் உள்ள வாய்க்காலில் கை மற்றும் கால்கள் கட்டப்பட்டு போர்வையால் உடல் சுற்றப்பட்டு இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

விசாரணையில் அந்தப் பகுதியைச் சேர்ந்த கருணாஸ் என்ற 19 வயது இளைஞர் கருணாஸ் மற்றும் இதற்கு உடந்தையாக விவேகானந்தன் (59) என்ற இரண்டு பேரும் சிறுமியை கடத்திச் சென்று விவேகானந்தன் வீட்டில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அப்போது சிறுமி மயங்கி விழுந்துள்ளார். இதனால் அவரைக் கொலை செய்து மூட்டையில் கட்டிச் சாக்கடையில் வீசி இருப்பது அவர்களது வாக்குமூலத்தில் தெரியவந்தது.

இதனைத் தொடர்ந்து சிறுமி கொலை தொடர்பாகப் பாலியல் வன்கொடுமை, எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டம், கொலை வழக்கு மற்றும் போக்சோ உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் புதுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அதாவது இந்த சம்பவத்தில் கைதான குற்றவாளிகள் கருணாஸ் மற்றும் விவேகானந்தன் ஆகியோர் மீது போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்புச் சட்டங்களில் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மேலும் வழக்கில் விரிவான விசாரணை நடத்த ஐ.பி.எஸ். அதிகாரி கலைவாணன் தலைமையில் சிறப்பு குழு ஒன்றும் அமைத்து உத்தரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்தும் உடற்கூறாய்வு அறிக்கையில் உறுதியாகியுள்ளது. எனவே இந்த வழக்கு தொடர்பாக போக்சோ நீதிமன்றத்தில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.