ADVERTISEMENT

7தமிழர் விடுதலையில் தூங்கிக்கொண்டிருக்கும் ஆளுநரை தட்டி எழுப்பவே போராட்டம் !!

08:42 PM Sep 26, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக 7 தமிழர்கள் விடுதலை செய்ய கோரி சேப்பாக்கம் விருந்தினர் மளிகை அருகே மாபெரும் போராட்டம் நடைபெற்றது.

ADVERTISEMENT


தமிழக அமைச்சரவை 7 பேர் விடுதலை குறித்து தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியுள்ளது இந்த தீர்மானத்தை ஏற்று ஆளுநர் உடனடியாக 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பாக போராட்டம் நடைபெற்றது.


இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்துகொண்டனர். போராட்ட மேடையில் தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேலுமுருகன் பேசுகையில்,


எடப்பாடி பழனிச்சாமி ஜெயலலிதா பெயரை சொல்லி செய்த ஒரே நல்ல விஷயம் 7 பேர் விடுதலைக்கான அமைச்சரவை தீர்மானம்தான். ஆளுநருக்கு அனுப்பப்பட்ட அந்த தீர்மானத்தின்படி காலம் தாழ்த்தாமல் அந்த 7 பேரையும் விடுதலை செய்யவேண்டும். ஆளுநரே நாங்கள் உங்களிடம் பிச்சை கேட்கவில்லை எங்கள் ஜனநாயக உரிமையாதான் கேட்கிறோம். ஆளுநருக்கு அமைச்சரவை தீர்மானம் அனுப்பப்பட்டு பலநாட்கள் ஆகிய நிலையில் இதுவரை அதை நிறைவேற்றாமல் மோடி அரசு காலம் தாழ்த்தி வருகிறது. ஆளுநர் தூங்காமல் இந்த தீர்மானத்தின் அடிப்படையில் 7 பேரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.



எங்கள் கட்சி தொண்டர்கள் மீது தொடர்ந்து பொய் வழக்குகள் போடப்பட்டு குண்டர் சட்டம் போன்ற சட்டங்கள் மூலம் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்து தொடர்ந்து தமிழக அரசு எங்களை வஞ்சித்து வருகிறது. அதேபோல் போராட்டம் செய்யவும் அனுமதி தராமல் வைக்கும் நிலைப்பாட்டை கைவிடவேண்டும். கட்சி தொண்டர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை தகர்த்து தற்போது போராட்டத்தில் இறங்கியுள்ளோம் எனக்கூறினார்.


மேலும் நீதிமன்றத்தை அவதூறாக பேசி 9 வழக்கு போடப்பட்டு, நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவிடப்பட்டு போலீசார் தனிப்படையும் தேடிவரும் நிலையில் எந்த அடிப்படையில் ஆளுநரை எச்.ராஜா சந்தித்தார் என கேள்வி எழுப்பினார்.


தமிழக வாழ்வுரிமை கட்சி 8 வழிச்சாலை, சுங்கச்சாவடி, டாஸ்மாக் போன்ற மக்களின் வாழ்வாதாரத்திற்கு கேடுவிளைவிக்கும் செயல்களை எதிர்ப்பதிலேயே தொடர்ந்து இருக்கும். அதற்கான போராட்டங்களை எப்போதும் முன்னெடுக்கும் என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT