ADVERTISEMENT

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கைது நடவடிக்கைகள்; நாளை மீனவர்கள் அடையாள வேலை நிறுத்தம் 

09:10 PM Aug 28, 2022 | angeshwar

ADVERTISEMENT

ADVERTISEMENT

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து நேற்று காலை மீனவர்கள் மீன் பிடிக்கச் சென்றனர். மீனவர்களில் 6 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தனுஷ்கோடி-தலைமன்னார் இடையே மீன் பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களை எல்லை தாண்டியதாக கூறி ஒரு விசைப் படகு மற்றும் 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டு மன்னார் கடற்படை முகாமிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் கைது செய்ததை கண்டித்து தமிழக மீனவர்கள் நாளை அடையாள வேலை நிறுத்தம் இருக்கப்போவதாகவும், இலங்கை கடற்படையினர் கைது செய்த 6 மீனவர்களையும் விசைப்படகுகளையும் விடுவிக்க மீனவர்கள் வலியுறுத்தி மீன்பிடிக்கச் செல்ல அனுமதி வாங்கும் இடத்தில் போராட்டம் செய்யப் போவதாகவும் தெரிவித்தனர்.

இதற்கு முன் நாகை மீனவர்கள் 9 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு இன்னும் தாயகம் திரும்பாத நிலையில் மேலும் 6 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT