
கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலயத் திருவிழா ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடைபெறுவது வழக்கம். இந்திய-இலங்கை உறவை மேம்படுத்தும் திருவிழாவாக கொண்டாடப்படும் இந்த விழாவில் தமிழக மீனவர்களும் அனுமதிக்கப்படுவர். மொத்தம் இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த விழாவின் தொடக்க விழா இன்று மாலை நடைபெற இருப்பதையொட்டி தமிழக மீனவர்கள் கச்சத்தீவு செல்ல ஆயத்தமாகி வருகின்றனர்.
தமிழகத்திலிருந்து கச்சதீவு செல்ல 100 பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் ராமேஸ்வரத்திலிருந்து 81 பக்தர்கள் ஒரு நாட்டுப் படகு மற்றும் இரண்டு விசைப்படகுகளில் கச்சத்தீவு செல்ல உள்ளனர்.கடந்த ஆண்டு கரோனா காரணமாக கச்சத்தீவு புனித அந்தோணியார் ஆலய திருவிழா நடைபெறாமல் இருந்த நிலையில், இந்த ஆண்டு திருவிழா நடைபெறுகிறது. தொடக்கத்தில் இந்த ஆண்டு தமிழக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என இலங்கை அரசு அறிவித்திருந்த நிலையில், தமிழக மற்றும் மத்திய அரசின் அழுத்தத்தின் காரணமாக தமிழக பக்தர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)