ADVERTISEMENT

சர்கார் படத்தின் கதை கரு திருடப்பட்டதா? எழுத்தாளர் ஜெயமோகன் விளக்கம்

07:49 PM Oct 28, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

விஜய் நடித்து தீபாவளிக்கு திரைக்கு வர இருக்கும் சர்கார் படத்தின் கதை தனது ‘செங்கோல்’ என்ற கதையில் இருந்து திருடப்பட்டது என்று திரைத்துறையில் துணை இயக்குநராக இருக்கும் வருண் ராஜேந்திரன் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தில் 10 ஆண்டுகளுக்கு முன்னரே செங்கோல் கதையை பதிவு செய்து வைத்துள்ளதாக வருண் தனது புகாரில் கூறியுள்ளார். செங்கோல் கதையும் சர்கார் கதையும் ஒன்றே என்று எழுத்தாளர் சங்கத்தின் தலைவர் கே.பாக்யராஜும் தெரிவித்துள்ளார். ஆனால், சர்கார் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், இக்கதை திருடப்பட்டது அல்ல. இது என் கதைதான் என்கிறார்.

ADVERTISEMENT

நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்கப்போகிறது? யார் பக்கம் தீர்ப்பு வரப்போகிறது என்று இரு தரப்பினரும் பதைபதைப்புடன் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில் சர்கார் படத்திற்கு வசனம் எழுதியுள்ள எழுத்தாளர் ஜெயமோகன் சேலத்தில் அளித்துள்ள பேட்டியில், ‘’சர்க்கார் படத்தின் கதையின் கரு திருடப்பட்டது அல்ல. ஒரு நிகழ்வை பற்றி யார் வேண்டுமானாலும் சிந்திக்கலாம்’’என்று சர்ச்சை குறித்து தனது விளக்கத்தை அளித்துள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT