ADVERTISEMENT

ஆரம்பித்தது அக்னி நட்சத்திரம்......!

08:31 AM May 04, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயிலின் காலம் இன்று (04/05/2022) தொடங்கிய நிலையில், மூன்று டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் மீது சூரியன் அதிக வெப்பத்தைக் கொடுக்கும் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் இன்று (04/05/2022) தொடங்கி வரும் மே மாதம் 28- ஆம் தேதி முடிவடைகிறது. இதனிடையே, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், இன்று தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 3 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பம் அதிகரிக்கக் கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில், நேற்று (03/05/2022) 10 இடங்களில் வெயில் சதமடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி ஃபாரன்ஹீட்டாக வெப்பநிலைப் பதிவானது. அதற்கு அடுத்தபடியாக, திருத்தணி மற்றும் திருச்சியில் தலா 104 டிகிரி ஃபாரன்ஹீட்டும், மதுரை விமான நிலையத்தில் 103 டிகிரியும், ஈரோடு, கரூர், பரமத்தி வேலூர், தஞ்சை மற்றும் மதுரையில் தலா 102 டிகிரியும் வெயில் பதிவாகியுள்ளது.

வெப்பநிலை அதிகரித்தாலும், தமிழகத்தில் இன்று (04/05/2022) ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என்றும், நாளை (05/05/2022) கிருஷ்ணகிரி, தருமபுரி, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நீலகிரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT