ADVERTISEMENT

பிரபலங்களை நெகிழ வைத்த ஆசிரியர் மாணவர்கள் இடையாயன பாசப்போராட்டம்!

10:34 AM Jun 22, 2018 | Anonymous (not verified)


அரசுப்பள்ளி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் இடையையேயான பாசப்போராட்டம் நாடு முழுவதும் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் நடந்த இந்த பாசப்போராட்டம் தற்போது நாடு முழுவதும் பேசப்பட்டு வருகிறது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

பள்ளி மாணவர்களுக்கு ஆசிரியர் என்றாலே ஒருவித பயம் தொற்றும், அந்த ஆசிரியர் வகுப்பு வராவிட்டால் மகிழ்ச்சி அடைவார்கள். இப்படி இருக்கும் ஆசிரியர் மாணவர் உறவே நாம் தெரிந்தது, ஆனால் திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் நடந்த பாசப்போராட்டத்தை கண்டு பிரபலங்கள் வியந்து பாராட்டி வருகின்றனர். ஆசிரியர் பகவான் மற்றும் அவரது மாணவர்களின் பிணைப்பு மனதுக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக 5 ஆண்டுகள் பணிபுரிந்து வந்தார் பகவான். இந்த சூழ்நிலையில் பகவான், திருத்தணி அடுத்த அருங்குளத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு பணிஇடமாறுதல் செய்யப்பட்டார். இதனை அறிந்த மாணவ, மாணவிகள் அவர் வேறுபள்ளிக்கு செல்லக்கூடாது என்று கதறி அழுதனர்.


பள்ளிக்கு வந்து பணிவிடுப்பு கடிதம் வாங்கிய பகவானை, வெளியே செல்ல விடாமல் அவர்கள் அரங்கேற்றிய பாசப்போராட்டம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆசிரியரை கட்டி அணைத்தபடி மாணவ-மாணவிகள் கதறி அழுதனர். பகவானும் மாணவர்களை பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடித்தார். இதனையடுத்து ஆசிரியர் பகவான் பணியிட மாற்றம் 10 நாட்களுக்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

மனதை நெகிழ வைக்கும் இந்த சம்பவம் ஊடகங்களிலும், சமூகவலைதளங்களிலும் அதிகம் பேரால் பார்க்கப்பட்டது. இந்நிலையில் தி நியூஸ் மினிட் செய்தியை பார்த்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், பாலிவுட் நடிகர் ஹரித்திக் ரோஷன் ஆகியோர் நெகிழ்ச்சியுடன் தங்களது கருத்துகளை டிவிட்டரில் பதிவு செய்துள்ளனர்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த செய்தியை சுட்டிக்காட்டி குரு - சிஷ்யர்கள் என தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அதேபோல், பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் தனது பதிவில் ஆசிரியருக்கும் அவரது மாணவர்களுக்கும் இப்படியான உறவை பார்க்கும் போது மனதுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதேப்போல் பல பேர் ஆசிரியர் பகவான் மாணவர்களிடையேயான பிணைப்பை சமூகவலைதளங்களில் வியந்து பாராட்டி வருகின்றனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT