Teacher_bhagwan

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வெளியகரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக 5 ஆண்டுகள் பணியாற்றி வந்தவர் ஆசிரியர் பகவான். இந்த சூழ்நிலையில் பகவான், திருத்தணி அடுத்த அருங்குளத்தில் உள்ள ஒரு பள்ளிக்கு பணிஇடமாறுதல் செய்யப்பட்டார். இதனை அறிந்த மாணவ, மாணவிகள் அவர் வேறுபள்ளிக்கு செல்லக்கூடாது என்று கதறி அழுதனர்.

Advertisment

style="display:inline-

block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-

7711075860389618"

data-ad-slot="3041061810">

பள்ளிக்கு வந்து பணிவிடுப்பு கடிதம் வாங்கிய பகவானை, வெளியே செல்ல விடாமல் அவர்கள் அரங்கேற்றிய பாசப்போராட்டம் அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. ஆசிரியரை கட்டி அணைத்தபடி மாணவ-மாணவிகள் கதறி அழுதனர். பகவானும் மாணவர்களை பிரிய மனமில்லாமல் கண்ணீர் வடித்தார். இதனையடுத்து ஆசிரியர் பகவான் இந்த பள்ளியில் 10 நாட்கள் மட்டும் பணி செய்ய அதிகாரி அனுமதி அளித்தார்.

Advertisment

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே பொம்மராஜ்பேட்டை கிராமத்தில் விவசாய குடும்பத்தை சேர்ந்த கோவிந்தராஜ் - தெய்வானை தம்பதிக்கு கடந்த 25.07.1989ல் மகனாக பிறந்தவர் பகவான். தொடக்க கல்வியை ஊராட்சி துவக்கப் பள்ளியிலும், மேல்நிலைப் கல்வியை பொதட்டூர்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியிலும் படித்தார். திருத்தணி அரசு கலைக் கல்லூரியில் பி.ஏ ஆங்கில இலக்கியம் பட்டம் பெற்றார்.

Teacher_bhagwan

ஆசிரியர் பயிற்சி பட்டய படிப்பு (பி.எட்) பொதட்டூர்பேட்டையில் இ.எஸ்.எஸ். கல்வியியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போதே ஆசிரியர் போட்டி தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 2014ம் ஆண்டு செப்டம்பர் 29ம் தேதி வெளியகரம் அரசினர் உயர் நிலைப்பள்ளியில் ஆங்கில பட்டதாரி ஆசிரியராக பணியை துவக்கினார். பகவான் பணியில் சேர்ந்த பிறகு மாணவர்கள் ஆங்கில பாடம் மீது ஆர்வம் கொண்டனர்.

இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஆங்கில பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று வருகின்றனர். ஆசிரியர், மாணவர் என்ற நிலையில் மாணவர்களிடம் வேறுபாடு காட்டாமல், மாணவர்களின் நிலை அறிந்து அவர்களுக்கு பாடம் நடத்தும் முறையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். மாணவர்களின் நண்பனாக, பெற்றோராக, சகோதரனாக மாணவர்களுடன் ஒருங்கிணைந்து பழகி கற்றல் திறனை மேம்படுத்தினார்.

அதே நேரத்தில் பாடங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் வழங்காமல் மாணவர்களுக்கு பொது அறிவு, சமூக சேவை, போட்டி தேர்வுகள், வேலை வாய்ப்புக்கு தேவையான கல்வி ஆற்றல் முறைகளை கற்பித்தார். அதன் காரணமாக மாணவர்களின் இதயங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.