ADVERTISEMENT

மோடி ஆட்சியில் நாடு குட்டிச்சுவராகி விட்டது!; மு.க.ஸ்டாலின் தாக்கு!!

10:28 AM Jan 31, 2019 | elayaraja

பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியில் நாடு குட்டிச்சுவராகி விட்டதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

ADVERTISEMENT


மக்களவை தேர்தலையொட்டி, மக்களிடம் செல்வோம், மக்களிடம் சொல்வோம், மக்கள் மனதை வெல்வோம் என்ற முழக்கத்துடன் திமுக, தமிழகம் முழுவதும் ஊராட்சி சபைக்கூட்டங்களை நடத்தி வருகிறது.

ADVERTISEMENT

அதன்படி, சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த பாகல்பட்டியில் நேற்று (ஜனவரி 30, 2019) ஊராட்சி சபைக்கூட்டம் நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அந்தப் பகுதியில் நிலவும் அடிப்படை பிர ச்னைகள் குறித்தும் மக்களிடம் கேட்டறிந்தார்.

கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது: கிராமங்களில் ஊர £ட்சி சபைக்கூட்டம் நடத்துவது முக்கியத்துவம் வாய்ந்தது. முதன்முதலாக மக்கள் பிரதிநிதிகள், கிராமசபைக் கூட்டங்களில்தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர். குடவோலை முறையில் ஆரம்பித்ததற்கான ஆதாரங்கள் உத்திரமேரூரிலும், கும்பகோணத்திலும் இன்றும் உள்ளன.

இந்த குடவோலை முறைதான், வாக்குச்சீட்டாக மாறி, இப்போது வாக்கு இயந்திரமாக உருவெடுத்து இருக்கிறது. நீங்கள் வாக்களித்து எம்பி, எம்எல்ஏக்களை தேர்வு செய்து, நாடாளுமன்றத்திற்கும், சட்டசபைக்கும் அனுப்புகிறீர்கள். அதேபோல் உள்ளூர் பிரச்னைகளை தீர்க்க, உள்ளாட்சி அமைப்புகளுக்கும் நிர்வாகிகளை தேர்வு செய்கிறீர்கள். அவர்கள் உங்கள் பிரச்னைகளை பேசி, அதற்கு தீர்வு க £ண வேண்டும்.

ஆனால், தற்போது தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளும் இல்லை. ஆட்சியும் முறையாக நடக்கவில்லை. மத்தியிலும், மாநிலத்திலும் முறையாக ஆட்சி நடக்காததால் நாடு, திசை மாறி போய்க்கொண்டிருக்கிறது. மோடி ஆட்சியில் நாடு குட்டிச்சுவராகி விட்டது.

நீங்கள் இந்த ஊராட்சிசபைக் கூட்டத்திற்கு மிகுந்த ஆர்வத்துடன் வந்திருக்கிறீர்கள். பெண்கள் டிவி சீரியலைக்கூட மறந்துவிட்டு வந்துள்ளனர். இதற்கு நீங்கள் எங்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையே காரணம்.

அந்த நம்பிக்கையோடு வந்த உங்களை வரவேற்கிறேன். நான் பேசுவது முக்கியமல்ல. நீங்கள் பேசுவதுதான் முக்கியம். அதை கேட்பதற்கு இங்கு வந்துள்ளேன்.

சமீபத்தில் மேற்குவங்கத்தில் மம்தாபானர்ஜி நடத்திய கூட்டத்திற்கு சென்றேன். அங்கு வந்த அனைத்துத் தலைவர்களும், நீங்கள் எப்படி இவ்வளவு சிறப்பாக ஊராட்சிசபைக் கூட்டங்களை நடத்துகிறீர்கள் என்று வியப்புடன் கேட்டனர். இதுவரை யாரும் இப்படி ஒரு கூட்டத்தை நடத்தியது இல்லை என்று அவர்கள் கூறியது பெருமையாக இருந்தது.

ஆனால் இங்குள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமி, நான் இப்போது புதிதாக கிராமங்களுக்கு செல்வதுபோல் பேசி வருகிறார். உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது, தமிழகத்தில் நான் செல்லாத கிராமங்களே இல்லை. என்னைப்போல் இதுவரை எந்த அமைச்சரும் கிராமங்களு க்கு சென்றதில்லை. இப்போது நான் தனியாக எந்த கிராமத்திற்குச் சென்றாலும் மக்கள், ஸ்டாலின் என்று ஓடி வருகிறார்கள்.

ஆனால் எடப்பாடி பழனிசாமி, போலீஸ் துணையில்லாமல் தனியாக கிராமங்களுக்குச் சென்றால் மக்களுக்கு அடையாளம் தெரியாது.

ஒருவேளை, அப்படியே அடையாளம் தெரிந்தால் கொலைகார முதல்வர் என்றுதான் சொல்வார்கள். கொடநாட்டில் நடந்த கொலைகளுக்கு அவர் காரணம் என்பதால், அப்படி கூறுவார்கள். அவரை கொலைகார முதல்வர் என்று நான் சொல்லவில்லை.

கொடநாடு விவகாரத்தில் தன் மீது வீண்பழி சுமத்துவதாக நீதிமன்றத்தில் அவர் மனுதாக்கல் செய்தார். அதை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள முடியாது என்று நீதிமன்றம் மறுத்து, அதை உறுதிப்படுத்தி உள்ளது.

திமுக ஆட்சியின்போதுதான் நமக்கு நாமே திட்டம், அண்ணா மறுமலர்ச்சித் திட்டம், பசுமை மயான திட்டம் என்று ஏராளமான திட்டங்கள், கிராமங்களின் வளர்ச்சிக்காக கொண்டு வரப்பட்டன. தற்போது எதுவுமே நட க்கவில்லை என்பதால்தான், நீங்கள் இந்த கூட்டத்திற்கு திரண்டு வந்திருக்கிறீர்கள்.

குறைகளை மனுவாகவும், நேரிலும் தெரிவிக்கிறீர்கள். நிச்சயம் ஆட்சி மாறும். உங்கள் மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும். இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT