ADVERTISEMENT

தேர்தல் அறிக்கையுடன் ஸ்டாலின்... கலைஞர் நினைவிடத்தில் மரியாதை...

10:52 AM Mar 13, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் கூட்டணிக் கட்சிகளுக்கு 61 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், 173 தொகுதிகளில் திமுக போட்டியிட உள்ளது. அனைத்து கூட்டணிக் கட்சிகளுக்கும் எத்தனை தொகுதிகள் என அறிவித்த நிலையில், நேற்று (12.03.2021) திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. நேற்று அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்கள் முன்னிலையில் வேட்பாளர் பட்டியலை திமுக தலைவர் ஸ்டாலின் வாசித்தார். திமுகவில் 70 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது. 20 எம்.எல்.ஏக்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்படவில்லை.

வேட்பாளர் பட்டியல் வெளியான நிலையில், எப்போது திமுக தேர்தல் அறிக்கை வெளியாகும் என உட்சபட்ச எதிர்பார்ப்பில் உடன்பிறப்புகள் உள்ளனர். தற்பொழுது அண்ணா, கலைஞர் நினைவிடமுள்ள மெரினாவிற்குச் சென்று அங்கும் தேர்தல் அறிக்கையை வைத்து திமுக தலைவர் மரியாதை செலுத்தினார். எனவே இன்று மதியம் 12 மணிக்கு அண்ணா அறிவாலயத்தில் திமுக தேர்தல் அறிக்கையை ஸ்டாலின் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT