ADVERTISEMENT

"ஸ்டாலினுக்கு நோபல் பரிசு வழங்கலாம்.." - எடப்பாடி பழனிசாமி விருப்பம்!

10:32 AM Feb 16, 2022 | suthakar@nakkh…

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்னும் சில நாட்களில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் பரபரப்பாகப் பிரச்சார வேலைகளைச் செய்து வருகிறார்கள். திமுக தரப்பில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மாநில அமைச்சர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் என முக்கிய தலைவர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

இந்நிலையில், நேற்று தஞ்சாவூரில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி வழக்கம் போல் திமுக அரசை கடுமையாக சாடினார். அவர் பேசும்போது, " தேர்தல் நேரத்தில் ஒரு பேச்சு, தேர்தல் முடிந்த பிறகு ஒரு பேச்சு என்று திமுக இரட்டை வேடம் போடுகிறது. திமுக ஆட்சியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கியதில் 500 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றுள்ளது. தரமற்ற பொருட்களை தமிழகம் முழுவதும் திமுக அரசு மக்களுக்கு வழங்கியுள்ளது. இவ்வாறு தரமற்ற அழகான பொருட்களை வழங்கிய ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டம் அல்ல, நோபல் பரிசே வழங்கலாம்.

எங்கள் மீது பொய் வழக்கு போட்டு எங்களை முடக்கலாம் என்று திமுக நினைக்கிறது. எந்த ஒரு வழக்குக்கும் அதிமுகவினர் அஞ்ச போவதில்லை. திமுகவுக்கு தோல்வி பயம் வந்துவிட்ட காரணத்தால் எங்களை மீது தொடர்ந்து பொய் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறது. நாட்டு மக்களுக்கு உண்மை தெரியும். ஸ்டாலினால் பொய் பேசி தப்பிக்கொள்ள முடியாது. நீதி, தர்மப்படி நடக்காவிட்டால் எதிர்காலத்தில் பதில் சொல்லியே ஆக வேண்டும்" என்றார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT