ADVERTISEMENT

ஸ்ரீபெரும்புதூர் ஃபாக்ஸ்கான் ஆலை மீண்டும் திறப்பு!

11:40 PM Jan 12, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் 25 நாட்களாக மூடப்பட்டிருந்த ஃபாக்ஸ்கான் தொழிற்சாலை இன்று (12/01/2022) திறக்கப்பட்டுள்ளது. எனினும், பொங்கல் விடுமுறைக்கு பிறகே ஆலையில் முழு வீச்சில் உற்பத்தித் தொடங்கும் நிலை உள்ளது.

ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் ஸ்ரீபெரும்புதூர் தொழிற்சாலை தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படுவதாகவும், சுகாதார வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறி, அந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் கடந்த மாதம் தொடர் போராட்டத்தில் இறங்கினர். இந்த நிலையில், ஆலை நிர்வாகத்துடன் அரசின் குழு பேச்சுவார்த்தை நடத்தியது.

அப்போது அரசு தரப்பு கூறிய ஆலோசனைகளின் படி, பிரச்சனைகளுக்கு விரைந்து தீர்வு காண்பதாக ஆலை நிர்வாகம் உறுதி அளித்தது. இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தப்படி, ஆலை இன்று (12/01/2022) திறக்கப்பட்ட நிலையில், சுமார் 300 தொழிலாளர்கள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். இதனால் வழக்கமான உற்பத்தி நடைபெறவில்லை.

பொங்கல் காரணமாகவும், கரோனா பிரச்சனை காரணமாகவும் பலர் பணிக்கு வரவில்லை எனவும், பொங்கல் விடுமுறைக்கு பின்பே உற்பத்தி முழு வீச்சில் தொடங்கும் எனவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில், கடந்த மாத ஊதியம் இன்னும் வழங்கப்படவில்லை என தொழிலாளர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT