ADVERTISEMENT

விரட்டியடித்த இலங்கை கடற்படை; ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனை

11:21 AM Oct 22, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

ராமேஸ்வரம் பகுதி மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாகை மாவட்டம் வேதாரண்யத்தில் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் கோடியக்கரை பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத பைபர் படகில் வந்த இலங்கை கடற்கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி செல்போன், ஜிபிஎஸ் கருவி, பேட்டரி மீன்பிடி உபகரணங்களை சென்றதாக புகார் எழுந்திருந்தது. இந்நிலையில் இதேபோல் ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த நிலையில் இலங்கை கடற்படையால் விரட்டி அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.


இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்ததால் மீன் பிடிக்க முடியாமல் ராமேஸ்வரம் மீனவர்கள் ஏமாற்றத்துடன் கரை திரும்பியுள்ளனர். மீனவர்களை விரட்டி அடித்ததோடு மட்டுமல்லாமல் இரண்டு விசைப் படகுகளில் இருந்த வலைகளையும் வெட்டி இலங்கை கடற்படையினர் சேதப்படுத்தியதாகவும் ராமேஸ்வரம் மீனவர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். விசைப்படகுக்கு 50 ஆயிரம் ரூபாய் முதல் 70 ஆயிரம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். ஒன்றிய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ராமேஸ்வரம் மீனவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT