ADVERTISEMENT

தங்க மங்கை கோமதிக்கு சிறப்பு அஞ்சல் தலை

11:19 PM Apr 30, 2019 | Anonymous (not verified)

திருச்சி முடிகண்டம் கிராமத்தைச் சேர்ந்த தமிழக தடகள வீராங்கனை கோமதி தோகாவில் நடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியின் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

இப்போட்டியில் இந்தியாவுக்கு கிடைத்த முதல் தங்கப்பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவுக்கும் தமிழகத்துக்கும் பெருமை தேடித்தந்த சாதனை வீராங்கனை தங்க மங்கை கோமதியை பாராட்டி ஊக்குவிக்கும் வகையில் அஞ்சல்தலை சேகரிப்பாளர் விஜயகுமார், ரகுபதி, லால்குடி விஜயகுமார் இந்திய அஞ்சல்த்துறை மை ஸ்டாம்ப் திட்டத்தில் அஞ்சல்தலை அச்சிட்டு வழங்கினார்கள்.

அஞ்சல் தலையில் தங்க மங்கை கோமதி தங்கப்பதக்கத்துடனும் செங்கோட்டை புகைப்படமும் உள்ளது.

அஞ்சல் தலையினை திருச்சி முடிகண்டம் கிராமத்தில் உள்ள இல்லத்தில் தடகள வீராங்கனை கோமதியிடம் வழங்கினார்கள். தடகள வீராங்கனை கோமதிக்கு மை ஸ்டாம்ப் திட்டத்தில் முதல்முறையாக அஞ்சல் தலையினை அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்க மங்கை கோமதியிடம் அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் ஆட்டோகிராஃப் பெற்று வந்தார்கள்.

தடகள வீராங்கனை கோமதிக்கு முதல் அஞ்சல் தலையினை வழங்கிய அஞ்சல்தலை சேகரிப்பாளர்கள் விஜயகுமார், ரகுபதி, லால்குடி விஜயகுமார் செயலினை அனைவரும் பாராட்டினார்கள்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT