ADVERTISEMENT

சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதி உண்மைதான்; விசாரணை அறிக்கையில் தகவல்!!

08:08 PM Jan 20, 2019 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா வசதிக்காக சிறையில் பல்வேறு விதிகள் மீறப்பட்டுள்ளதாகவும், சிறையில் கூடுதல் வசதிகள் ஏற்பாடு செய்து கொடுத்திருப்பதாகவும் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு நான்காண்டு சிறை தண்டனை பெற்றதை அடுத்து சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் ஷாப்பிங் பையுடன் சசிகலாவும், இளவரசியும் சிறை அறையில் இருந்து வெளியேறியது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகள் வெளியாகின. ஆனால் சசிகலாவும், இளவரசியும் பார்வையாளர் மாடத்திற்கு உறவினரை பார்க்க சென்றதாக விளக்கம் கூறப்பட்டது. சிறையில் சசிகலாவிற்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டதாக டிஜிபிக்கு சிறைத்துறை டிஐஜி ரூபா அறிக்கை அனுப்பி இருந்தார். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை தொடர்ந்து சிறை விதிகள் மீறப்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்து விசாரிக்க வினய்குமார் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது.

விசாரணை அறிக்கையில், சசிகலாவிற்கு சலுகை அளித்தது உண்மை என்பது தெரியவந்துள்ளது. சிறை அதிகாரிகளுக்கு சசிகலா தரப்பில் லஞ்சம் பெறப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. விசாரணைக் குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. சிறை கட்டுப்பாடுகளில் குறைபாடுகள் இருப்பதை இந்த குழுவினர் கண்டறிந்துள்ளனர். எந்தவித உத்தரவும் பிறப்பிக்க படாமல் சசிகலாவுக்கு முதல்தரமான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. சிறைக்குள் இதற்காக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்த பின்னரும் சிறப்பு சலுகைகளை வாபஸ் பெற சிறை அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒவ்வொரு சிறை அறையிலும் நான்கு கைதிகள் இருக்கக் கூடிய நிலையில் சசிகலா இளவரசி ஆகியோருக்கு மட்டும் 5 தனி அறை ஒதுக்கப்பட்டு அந்த அறைகளில் திரைச்சீலைகளும் போடப்பட்டுள்ளது. பூனை தொல்லை காரணமாக திரைசீலை போடப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டது. அதேபோல் சசிகலா சமைப்பதற்காக ப்ரெஷர் குக்கர் ,மஞ்சள் உள்ளிட்டசமையல் பொருட்களும் இருந்தது விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT