ADVERTISEMENT

தெற்கு ரயில்வே ஆலோசனைக் கூட்டம்; திமுக எம்பிக்கள் பங்கேற்பு (படங்கள்)

12:53 PM Feb 22, 2023 | prabukumar@nak…

ADVERTISEMENT

தெற்கு ரெயில்வேக்கு உட்பட்ட சென்னை ரயில்வே கோட்டத்தில் புதிய திட்டங்களை நிறைவேற்றுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் தெற்கு ரயில்வே பொதுமேலாளர் ஆர்.என்.சிங் தலைமையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள தெற்கு ரயில்வே தலைமையகத்தில் இன்று (22.02.2023) நடைபெற்றது. சென்னை சென்ட்ரல், தாம்பரம், ஆவடி ஆகிய ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவதற்கான தொழில்நுட்ப சாத்தியக்கூறு ஆய்வு நடைபெற்று வரும் நிலையில், அது தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

ADVERTISEMENT

மேலும், சென்னை கோட்டத்தில் 18 ரயில் நிலையங்களை நவீனமயமாக்குவது குறித்தும் பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு அறிவிக்கப்பட்டுள்ள 11 ஆயிரத்து 314 கோடி நிதியின் மூலம் சென்னை கோட்டத்திற்கு உட்பட்ட பகுதியில் புதிய ரயில் வழித்தடங்களை ஏற்படுத்துவது, அகல ரயில் பாதைகள், இரட்டை ரயில் பாதைகள் அமைப்பது குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் தயாநிதி மாறன், கதிர் ஆனந்த், கலாநிதி வீராசாமி, கிரிராஜன், விசிக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் விஷ்ணுபிரசாத், ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி சோமு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT