Skip to main content

புரியும் மொழியில் பேசிக்கொள்ளலாம்... ஜகா வாங்கியது தெற்கு ரயில்வே!

Published on 14/06/2019 | Edited on 14/06/2019

ரயில்வே துறையில் பணியாற்றும் ஊழியர்கள், அதிகாரிகள் தகவல் தொடர்புக்கு இனி இந்தி அல்லது ஆங்கிலத்தில் தான் பேச வேண்டும் என்று தெற்கு ரயில்வே அறிவுறுத்தி இருந்தது. இதுதொடர்பாக அனைத்து ஸ்டேசன் மாஸ்டர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தது.

 

railway

 

இதற்கு தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் மத்தியில் கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் தற்போது ரயில்வே கட்டுப்பாட்டு அதிகாரிகளும் நிலைய மேலாளர்களும் ஒருவருக்கொருவர் புரியும் மொழியில் பேசி தகவலை பரிமாறிக்கொள்ளலாம் என அந்த சுற்றறிக்கையில் திருத்தத்தை கொண்டுவந்துள்ளது தெற்கு ரயில்வே. 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

‘மின்சார ரயில் பயணிகளின் கவனத்திற்கு’ - தெற்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு

Published on 23/02/2024 | Edited on 23/02/2024
 Attention Electric Train Passengers Southern Railway Important Notice

சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

சென்னை கோடம்பாக்கம் - தாம்பரம் இடையேயான மின்சார ரயில் வழித்தடத்தில் தண்டவாள பராமரிப்பு மற்றும் பொறியியல் பணி தொடர்ந்து 3 வது வாரமாக நாளை மறுநாளான (25.02.2024) ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை நடைபெற உள்ளது. இதனால் சென்னை கடற்கரை - தாம்பரம் இடையே சுமார் 04.15 மணி நேரத்திற்கு 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

தெற்கு ரயில்வே அறிவிப்பின்படி, சென்னை கடற்கரையில் இருந்து தாம்பரம் செல்லும் ரயில்களும், தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை செல்லும் ரயில்களும், செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை  செல்லும் ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் பயணிகளின் வசதிக்காக தாம்பரம் - செங்கல்பட்டு இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் எனவும் ரயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் நாளை மறுநாள் பயணிகள் தேவைக்காக மெட்ரோ ரயில் மற்றும் மாநகர பேருந்துகளையும் கூடுதலாக இயக்கவும் தெற்கு ரயில்வே சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Next Story

ஓடும் இரயிலில் இளம் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்! 

Published on 22/02/2024 | Edited on 22/02/2024
young debate woman speaker rail issue

காரைக்காலில் இருந்து கடலூர் வழியாக பெங்களூர் சென்று கொண்டிருந்த பயணிகள் ரெயிலில் பட்டிமன்ற இளம் பெண் பேச்சாளரிடம் ஆபாசமாக நடந்துகொண்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 

நேற்று காலை காரைக்காலில் இருந்து புறப்பட்டு நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விருத்தாசலம் வழியாக பெங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த ரெயிலில் மயிலாடுதுறை பகுதியைச் சேர்ந்த  இளம் பட்டிமன்ற பெண் பேச்சாளர் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ரயில் கடலூர் துறைமுகம்,  குறிஞ்சிப்பாடி நெய்வேலி இடையில் காலை சுமார் 10 மணி அளவில் சென்று கொண்டிருந்தது. அந்தப் பெண் பயணம் செய்த பெட்டியில் ஒரு சிலர் மட்டுமே இருந்துள்ளனர். அப்போது முழு மது போதையில் 50 வயது மதிக்கத்தக்க ஒரு ஆசாமி அந்த இளம் பெண் எதிர் இருக்கையில் வந்து அமர்ந்தார்.

அப்படி அமர்ந்த அவர், அடிக்கடி அந்த இளம் பெண்ணை தவறான கண்ணோட்டத்தில் பார்த்ததோடு, திடீரென தனது ஆடையை விலக்கி இளம்பெண்ணை பார்த்து ஆபாசமாக, அருவருப்பான வகையில் செய்கை செய்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்த இளம்பெண், அந்த மனிதனை கண்டித்ததோடு அவரது செய்கையை செல்போனில் படம் பிடித்துள்ளார். இளம் பெண் கண்டித்தும் அந்த போதை ஆசாமி, தனது ஆபாச செய்கையை நிறுத்தவில்லை. இதனால் கோபமடைந்த அந்த பெண், அபாய சங்கிலியை பிடித்து இழுத்துள்ளார். ரயில் நெய்வேலி அருகே நிறுத்தப்பட்டது. 

பிறகு அதே ரயிலில் பயணிகள் பாதுகாப்புக்காக பயணம் செய்து கொண்டிருந்த ரயில்வே காவல்துறை சப் இன்ஸ்பெக்டர் சம்பவம் நடந்த பெட்டிக்கு விரைந்து சென்றார். அவரிடம் அந்த இளம் போதை ஆசாமி குறித்து புகார் தெரிவித்தார். அவரது புகாரின் பேரில் ரயில்வே போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் அந்த நபரை கைது செய்து விருத்தாசலம் ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரிடம் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.