ADVERTISEMENT

தென்னக ரயில்வே ஆலோசனைக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெளதமசிகாமணி பங்கேற்பு! 

09:24 AM Sep 10, 2019 | kalaimohan

தென்னக ரயில்வே சென்னை மற்றும் சேலம் கோட்டம் ரயில்வேதுறை ஆலோசனைக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெளதமசிகாமணி கலந்து கொண்டு தனது தொகுதி மக்களின் ரயில்வேதுறை சம்மந்தமான கோரிக்கைகளை நிறைவேற்றுமாறு வலியுறுத்தினார்.

கூட்டத்தில் கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் பேசியதாவது.

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தலைவர் கலைஞர் ஆட்சியில் துவங்கப்பட்ட சின்னசேலம் முதல் கள்ளக்குறிச்சி வரையிலான ரயில் பாதைகள் அமைக்கும் பணியை துரிதப்படுத்தப்பட வேண்டும். சின்ன சேலத்தில் ரயில்வே மேம்பாலம் அமைத்துத் தர வேண்டும்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

சின்ன சேலம் ஒன்றியம் மேல்நாரியப்பனூரில் கரும்பு ஏற்றி வரும் வாகனங்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்வதற்கு ஏதுவாக சுரங்கப்பாதை அமைத்துத்தர வேண்டும்.

ஆத்தூர் அருகே உள்ள காட்டுக்கோட்டையில் தற்போது எந்த ரயிலும் நிற்பதில்லை. அங்கு அரசுக் கலைக்கல்லூரியும், மாணவர்களின் விடுதிகளும் மேலும் அதிகப்படியான விவசாய வியாபாரிகள் இருப்பதால் அங்கு அனைத்து ரயில்களும் நின்று செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். ஆத்தூர் ரயில் நிலையத்தில் பயணிகள், முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அமர்வதற்கு இடவசதியை ஏற்படுத்தித் தர வேண்டும்.

ஆத்தூரில் உள்ள சுரங்கப்பாதை மழை பெய்தால் மக்கள் பயன்படுத்துவதற்கு ஏதுவாக இல்லை. மேலும் நீர் வடிவதற்கு நீண்ட நேரம் ஆகிறது. எனவே அப்பாதையை நவீனப்படுத்தித் தர வேண்டும். வாழப்பாடி ரயில்நிலையத்தில் முன்பதிவு செய்ய அலுவலகம் அமைத்துத்தர வேண்டும். மேலும் பயணிகள் அதிகம் ஏறும் போது பெட்டிகளில் கூட்ட நெரிசல் ஏற்படுவதால் விருதாச்சலம் முதல் சேலம் வரை செல்லும் பயணிகள் ரயிலில் இரண்டு பெட்டிகளை கூடுதலாக இணைத்துத்தர வேண்டும்.

அயோத்தியப்பட்டினம் எம்பெருமான்பாளையம் ஊராட்சியில் உள்ள ரயில் பாதையில் வாகனங்கள் அதிகம் கடப்பதால் ரயில்வே மேம்பாலம் அமைத்துத்தரவேண்டும். சின்னசேலம், தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி, பெத்தநாயக்கன் பாளையம் மற்றும் ஏத்தாப்பூர் ரயில் நிலையங்களில் உள்ள நடைமேடைகள் மிகவும் தாழ்வாக உள்ளதால் விபத்துகள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. ஆகையால் அனைத்து நடைமேடைகளின் உயரத்தை மேம்படுத்த வேண்டும்.

கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட சின்னசேலம், தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி, பெத்தநாயக்கன் பாளையம், ஏத்தாப்பூர் ஆகிய இடங்களில் உள்ள ரயில் நிலையங்களில் குடிநீர், கழிவறை மற்றும் பயணிகள் அமர வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை கள்ளக்குறிச்சி நாடாளுமன்ற உறுப்பினர் கெளதமசிகாமணி வலியுறுத்திப் பேசினார்.

இதை பாராட்டும் அதே நேரத்தில் சின்னசேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி வரை புதிய ரயில்பாதை அமைத்து ரயில் இயக்குவதற்க்கு 2004ல் கடலூர் எம் பியாகவும், மத்தியமந்திரியாகவும் இருந்த வேங்கடபதி மேற்படி கோரிக்கை வைத்தார் அப்போது ரயில்வே மந்திரியாக இருந்த பாமக வேலு அதற்கான முழுமுயற்சியினால் நிதி ஒதிக்கப்பட்டதோடு நிலம் கையகப்படுத்த அளவீடும் நடந்தது.

அதன்பிறகு திட்டம் கிடப்பில் அப்படியே போடப்பட்டது 2009ல் கள்ளக்குறிச்சி தொகுதியானது ஆதிசங்கர் திமுக சார்பில் எம்பி ஆனார். பிறகு 2014ல் அதிமுக சார்பில் காமராஜ் எம் பி . ஆனார். ஆனால் திட்டம் மட்டும் நகரவே இல்லை கள்ளக்குறிச்சி பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மிகப் பெரிய அளவில் கண்டனபோராட்டம் கூடநடத்தினார்கள். ரயில் வருவதற்கான அசைவே தெரியவில்லை. இப்போது திமுக எம்பி ஆகியுள்ள பொன்முடியின் வாரிசு கெளதம சிகாமணி களத்தில் இறங்கியுள்ளார். இவராவது ரயிலை கொண்டு வருவாரா?என்று ஆவலோடு உள்ளனர் மாவட்ட தலை நகரமாக மாற உள்ள கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் நாமும் தான்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT