ADVERTISEMENT

கலைஞர் சிலையை திறந்து வைத்தார் சோனியா!!

05:25 PM Dec 16, 2018 | kalaimohan

அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் வெண்கலச் சிலையை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் திறந்து வைத்தனர்.

ADVERTISEMENT

ADVERTISEMENT

கலைஞர் சிலை திறப்பு விழாவிற்கு டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைந்த சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் சென்னை வந்துள்ளனர். அவர்களை எம்பி கனிமொழி மற்றும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,புதுச்சேரி மாநில முதல்வர் நாராயணசாமி ஆகியோர் வரவேற்றனர்.

அவர்களது வருகையை அடுத்து அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் கலைஞர் சிலை திறப்பு விழாவில் கேரள முதல்வர் பினராய் விஜயன், ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அவர்களும் பங்கேற்றுள்ளனர்.

அதேபோல் இவ்விழாவில் கலந்துகொள்ள நடிகர் ரஜினிகாந்த் வருகை தந்துள்ளார். கி வீரமணி, வைகோ, டி.ராஜா ஆகிய அரசியல் தலைவர்களும் வருகை தந்துள்ளனர். பாஜ எம்பி சத்ருகன் சின்கா, முத்தரசன், திருமாவளவன், ஜிகே.வாசன் ஆகியோரும் விழாவில் பங்கேற்றுள்ளனர். கவிஞர் வைரமுத்து, நடிகர் நாசர், பிரபு, வடிவேலு, விவேக், மயில்சாமி உள்ளிட்டோரும் விழாவில் பங்கேற்றுள்ளனர்.

அதனை அடுத்து மேடைக்கு வந்த சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அண்ணா அறிவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் வெண்கலச் சிலையை திறந்து வைத்தனர்.

கலைஞர் சிலை திறக்கப்பட்டதையடுத்து சோனியா காந்தி, ராகுல், ஸ்டாலின் ஆகியோர் சென்னை மெரினாவில் உள்ள கலைஞர் நினைவிடத்துக்கு சென்று மலர் அஞ்சலி செலுத்த புறப்பட்டனர். அதனை எடுத்து ஒய்.எம்சி,ஏ மைதானத்தில் நடக்கவிருக்கும் மாபெரும் பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT