kalainagr statue in erode

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

தந்தை பெரியார் பிறந்த மண்ணான ஈரோட்டில் மறைந்த திமுக தலைவர் கலைஞர் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டுள்ளது. ஈரோடு எனது குருகுலம் என கலைஞர் பெருமையோடு குறிப்பிடுவார்

Advertisment

மறைந்த கலைஞர் கருணாநிதிக்கு சென்ற மாதம் சென்னையில் உள்ள தி.மு.க. தலைமை கழகமான அண்ணா அறிவாலயத்தில் முழு உருவ சிலை திறக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அவரின் ஈரோடு குருகுலத்தில் கலைஞருக்கு ஈரோடு திமுகவினர் சிலை அமைத்துள்ளனர். இந்த சிலைதிறப்பு விழா நிகழ்வு 30.1.2019 புதன்கிழமை மாலை 5 மணிக்கு நடக்கிறது. ஈரோட்டில் பிரதான பகுதியான முனிசிபல் காலனியில் திமுகவுக்கு சொந்தமான இடத்தில் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இச்சிலையை தற்போதைய திமுக தலைவரான முக ஸ்டாலின் திறந்து வைக்கிறார். ஈரோட்டில் நடைபெறும் இந்த நிகழ்வு திமுகவினர் மத்தியில் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

Advertisment

தொடர்ந்து கலைஞருக்கு பிப்ரவரி 14 ந் தேதி அறிஞர் அண்ணா பிறந்த காஞ்சிபுரத்தில் கலைஞரின் சிலை திறப்பு நடக்கவுள்ளது.