ADVERTISEMENT

“என் பொழுதுகள் கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு ஊஞ்சலாடுபவை” - பேரறிவாளன் விடுதலை குறித்து வேல்முருகன்!

03:48 PM May 18, 2022 | tarivazhagan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை அனுபவித்து வந்த பேரறிவாளன் பல ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்கு பின் உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் திரைப்பட பாடலாசிரியர் வேல்முருகன் ஒரு கவிதை எழுதியுள்ளார்.

அந்தக் கவிதை:


என் வீட்டுச்சுவரும்
உன் வீட்டுச் சுவரும்
ஒன்றல்ல
உன் சுவற்றில் வாசனைத் திரவம்
என் சுவற்றில் ரத்த வாடை


என் சோற்றுப்பானையும்
உன் சோற்றுப்பானையும்
ஒன்றல்ல
உன் பானையில் பாலும் நெய்யும்
என் பானையில் நொய்யும் குருணையும்


என் இரவு பகலும்
உன் இரவு பகலும்
ஒன்றல்ல
உன் இரவுகள் நிம்மதியும் அமைதியும்
என் இரவுகள் நிர்கதியும் ரணமும்

என் பொழுதுபோக்கும்
உன் பொழுதுபோக்கும்
ஒன்றல்ல
உன் பொழுதுகள் காலாட்டிக்கொண்டு கழிபவை
என் பொழுதுகள் கழுத்தில் கயிற்றைக் கட்டிக்கொண்டு ஊஞ்சலாடுபவை


என் வியர்வையும்
உன் வியர்வையும்
ஒன்றல்ல
உன் வியர்வை சிந்துவது ஆரோக்கியத்திற்கு
என் வியர்வை சிந்துவது ஆயுள் தீர்ப்பதற்கு


என் விளையாட்டும்
உன் விளையாட்டும்
ஒன்றல்ல
உன் ஆட்டம் மக்கள் முன்னிலையில்
கத்தி விளையாடியது
என்‌ ஆட்டம் கத்திமுனையில்
சருக்கு விளையாடியது


ஏழை என் குரலும்
அதிகாரம் உன் குரலும்
ஒன்றல்ல
ஆனாலும் ஆர்ப்பரிக்கும்
அலையென உள்நுழைந்து சிறை உடைக்கும்

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT