dhivakaran

Advertisment

சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் வேல்முருகனை கடந்த திங்கள்கிழமை டிடிவி தினகரன் சந்தித்தார். இதையடுத்து வேல்முருகனை தானும் சந்திப்பதாக இருந்தார் திவாகரன். இதற்காக அவர் புழல் சிறைக்கு சென்றார். இந்த நிலையில் இன்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி தமிழகத்தில் ஆயுள் தண்டனை பெற்ற 67 கைதிகள் புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்படுவதால், இன்று வேல்முருகனை சந்திக்க அனுமதிக்க முடியாது என்று கூறிவிட்டனர். மற்றொரு நாளில் அனுமதி பெற்று சந்திக்கலாம் என்று சொன்னதால் திவாகரன் திரும்பினார்.