ADVERTISEMENT

முறையற்ற தொடர்பில் இருந்த தாயை மீட்டு தந்தையுடன் சேர்த்து வைத்த மகன்; கொலையில் முடிந்த பகீர் சம்பவம்

06:15 PM Apr 11, 2023 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

முறையற்ற தொடர்பில் இருந்த தாயை ஆண் நண்பரிடம் இருந்து மீட்டு தந்தையுடன் சேர்த்து வைத்த மகனை முறையற்ற தொடர்பிலிருந்த நபர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் சென்னை விருகம்பாக்கத்தில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தாங்கல் ஏரிக்கரை பகுதியைச் சேர்ந்தவர் இளஞ்செழியன். பிளம்பர் வேலை பார்த்து வந்த இளஞ்செழியனின் மனைவி தனலட்சுமி. இவர்களுக்கு 17 வயதில் மதன்குமார் என்ற மகனும், மற்றொரு இளைய மகனும் உள்ளனர். வேளச்சேரியில் உள்ள அரசு பள்ளியில் மதன்குமார் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்தார். தாய் தனலட்சுமி புளியந்தோப்பில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வந்தார்.

மது போதைக்கு அடிமையான இளஞ்செழியன் மது அருந்திவிட்டு தினமும் மனைவி தனலட்சுமி உடன் சண்டையிட்டு வந்துள்ளார். இந்நிலையில் வேலை பார்க்கும் இடத்தில் கார்த்திக் என்ற நபருடன் தனலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. தனலட்சுமி கணவர் இளஞ்செழியனை போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்க கார்த்திக் உதவி செய்ததாகக் கூறப்படுகிறது. அதனைத் தொடர்ந்து நாளடைவில் தனலட்சுமிக்கு கார்த்திக்கும் இடையே இருந்த நட்பு முறையற்ற தொடர்பாக மாறியுள்ளது. இதன் காரணமாக தனலட்சுமி அவரது மகன்களுடன் வேளச்சேரியில் உள்ள தனது வீட்டின் அருகே கார்த்திக்கை குடியமர்த்தியதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் 8 மாதங்களுக்கு பின் போதை மறுவாழ்வு மையத்திற்கு சென்று விட்டு வெளியே வந்த இளஞ்செழியன் மனைவி தனலட்சுமி இருக்கும் இடத்தை கண்டறிந்து வந்துள்ளார்.

கார்த்திக்கிடம் இருந்து பிரிந்து வருமாறு தனலட்சுமியிடம் கூறியுள்ளார். மகன்களும் அப்பா திருந்தி வந்து விட்டார். நாம் அவரிடம் சென்று விடலாம் என தாயிடம் கூறியுள்ளனர். இதனால் தனலட்சுமி மனமாற்றம் அடைந்ததால் தொடர்ந்து மூவரும் விருகம்பாக்கத்திற்கு குடிபெயர்ந்தனர். இந்தநிலையில் தனலட்சுமி பிரிந்து சென்றதால் ஆத்திரமடைந்த கார்த்திக் கடந்த 7ம் தேதி அவர் வசிக்கும் விருகம்பாக்கம் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்பொழுது வீட்டுக் கதவை திறந்த சிறுவன் மதன்குமாரை கத்தியால் குத்தி விட்டு கார்த்திக் தப்பி ஓடியுள்ளார். பின்னர் ரத்த வெள்ளத்தில் கிடந்த மதன்குமாரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் மதன்குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் கார்த்திக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT