ADVERTISEMENT

சற்று அதிகரித்த பாதிப்பு... -தமிழகத்தின் இன்றைய கரோனா நிலவரம்!

07:26 PM Sep 03, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

தமிழகத்தில் இன்று ஒருநாள் கரோனா பாதிப்பு என்பது 1,562 லிருந்து குறைந்து 1,568 ஆகப் பதிவாகியுள்ளது. இது நேற்றைய எண்ணிக்கையை விட சற்று அதிகமாகும். இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 1,60,742 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. சென்னையில் மட்டும் இன்று 162 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று சென்னையில் கரோனா ஒருநாள் பாதிப்பு என்பது 166 என்று இருந்த நிலையில், இன்று குறைந்துள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி தமிழகத்தில் ஒரேநாளில் 19 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் கரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 34,980 ஆக அதிகரித்துள்ளது. இதில் அரசு மருத்துவமனையில் 16 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 3 பேரும் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் கரோனா சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 16,370 ஆக உள்ளது. இன்று ஒரே நாளில் 1,657 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை 25,68,161 பேர் மொத்தமாகக் குணமடைந்துள்ளனர். இணை நோய்கள் ஏதும் இல்லாத ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். கோவை-239, ஈரோடு-125, செங்கல்பட்டு-103, திருவள்ளூர்-65, தஞ்சை-108, நாமக்கல்-62, சேலம்-58, திருச்சி-58, திருப்பூர்-98 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா தொற்று எண்ணிக்கை சற்று அதிகரித்திருக்கும் நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் கடந்த சில நாட்களாகவே தினசரி கரோனா பாதிப்பு 30 ஆயிரத்தைக் கடந்து வந்தது. இந்நிலையில் இன்று தினசரி கரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் கேரளாவில் 29,322 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. நேற்று கேரளாவில் 32,803 பேருக்கு கரோனா உறுதியானது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT