ADVERTISEMENT

வைரலான சி.சி.டி.வி.! ஓட்டல் ஓனரைக் கத்தியால் குத்திய சகோதரர்கள் கைது!

02:53 PM Mar 13, 2024 | tarivazhagan

‘பார்சல் வழங்குவதற்குத் தாமதமானதால் ஓட்டல் உரிமையாளருக்கு கத்திக்குத்து’ என சிவகாசி – மாரனேரியில் நடந்த சம்பவத்தின் சி.சி.டி.வி. காட்சி, சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதனைத் தொடர்ந்து மாரனேரி காவல்நிலையம், ஏ.துலுக்கபட்டியைச் சேர்ந்த முனியாண்டியின் மகன்கள் மாரீஸ்வரன் மற்றும் பாண்டீஸ்வரன் மீது வழக்குப் பதிவு செய்தது.

ADVERTISEMENT

ஜெகநாதன் என்பவர் ஆலங்குளம் சாலையில் ஜே.ஜே. ஓட்டல் நடத்துகிறார். அவருடைய ஓட்டல் தொழிலுக்கு உதவியாக மகன்கள் கரிமால், ராஜேஸ் கண்ணன், வாசுதேவன் ஆகியோர் இருந்து வருகின்றனர். இரவு 8 மணியளவில், மாரீஸ்வரனும் பாண்டீஸ்வரனும் அந்த ஓட்டலுக்கு பார்சல் சாப்பாடு வாங்கச் சென்றனர். அப்போது ராஜேஸ் கண்ணன் ஓட்டலுக்குள் செல்லும்போது தெரியாமல் இடித்துவிடுகிறார். உடனே இருவரும் “பார்த்துப் போகவேண்டியதுதானே..” என்று ராஜேஸ் கண்ணனைக் கெட்ட வார்த்தையால் திட்டுகின்றனர். கரிமாலும் ஓட்டலில் இருந்தவர்களும் இருவரையும் சத்தம்போட, “உங்களை வந்து வச்சிக்கிறோம்.” என்று சென்றுவிட்டனர்.

ADVERTISEMENT

அடுத்த 15 நிமிடங்களில் மாரீஸ்வரனும் பாண்டீஸ்வரனும் மீண்டும் ஓட்டலுக்கு வந்து வாசுதேவனைக் கத்தியால் குத்தினார்கள். அப்போது கரிமாலும் வாசுதேவனும் பிடிக்க முயன்றபோது, வாசுதேவனுக்கு கையில் காயமேற்பட்டது. கரிமாலும் ஓட்டலில் இருந்த மற்றவர்களும் கத்தி வைத்திருந்த சகோதரர்களுடன் மல்லுக்கட்டியபோது “எங்கள பகைச்சுக்கிட்டா கத்தியால குத்தி கொன்றுவிடுவோம்..” என்று மிரட்டிவிட்டு தப்பிச் சென்றனர். சிவகாசி அரசு மருத்துவமனையில் கரிமால் அளித்த புகாரின் பேரில், மாரனேரி காவல்நிலையம் வழக்கு பதிவுசெய்து இருவரையும் தேடிவந்தது. தற்போது மாரீஸ்வரனும் பாண்டீஸ்வரனும் கைதாகியுள்ளனர்.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT