விருதுநகர் மாவட்டம்- சிவகாசி அருகிலுள்ள வேண்டுராயபுரம் கிராமத்தில் வசிக்கிறார் கருப்பசாமி. டிரைவர் வேலை பார்க்கும் இவருக்கு கல்லூரி மற்றும் பள்ளியில் கல்வி பயின்று வரும் நான்கு பெண் குழந்தைகள் உள்ளனர். இவரது மூன்றாவது மகளுக்கு 9 வயதுதான் ஆகிறது. சாமிநத்தம் அரசு தொடக்கப்பள்ளியில் 4- ஆம் வகுப்பு படித்து வருகிறாள்.

Advertisment

கடந்த 1- ஆம் தேதி பள்ளி விடுமுறை என்பதால், தனது சகோதரி கோபிகாவுடன் கிராமத்தின் ஒதுக்குப்புறமாக உள்ள காட்டுப்பகுதிக்கு ஆடு மேய்க்கச் சென்றாள். அன்று மாலை கோபிகா மட்டும் வீடு திரும்பினாள். தங்கை வரவில்லை. அவள் காணாமல் போனது குறித்து மல்லி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

VIRUDHUNAGAR DISTRICT SIVAKASI CHILD INCIDENT POLICE INVESTIGATION

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8252105286"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

Advertisment

தீயணைப்புத்துறையினர் உதவியுடன் காணாமல்போன மாணவியைக் காவல்துறையினர், பல்வேறு பகுதிகளில், குறிப்பாக காட்டுப் பகுதிகளில் தேடினர். சிறுமி கிடைக்கவில்லை. இந்த விஷயம் வெளியில் பரவியதும் கிராமத்தினர் கொந்தளித்தனர். சிறுமியைக் கண்டுபிடித்துத்தர வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். வருவாய் மற்றும் காவல்துறையினர், மீட்பு நடவடிக்கை எடுப்போம் என்று உறுதியளித்த பிறகே கலைந்து சென்றனர்.

இந்நிலையில், இன்று (03/02/2020) அதிகாலை 03.00 மணியளவில் அவளது வீட்டுக்குப் பின்புறம் உள்ள கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளாள் அச்சிறுமி.

கடந்த ஜனவரி 20- ஆம் தேதி இதே வயதிலுள்ள சிவகாசி கொங்கலாபுரம் சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில், வேண்டுராயபுரம் சிறுமி காணாமல் போய், இறந்த நிலையில் உடல் மீட்கப்பட்டிருப்பது இந்த மாவட்டத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.