ADVERTISEMENT

தேர்தல் விதிமீறலை துவக்கிய பா.ஜ.க... கை கட்டி வேடிக்கைப் பார்த்த மாவட்ட நிர்வாகம் ...!

10:22 PM Apr 17, 2019 | nagendran

ADVERTISEMENT


தேர்தல் பிரச்சாரம் நிறைவடைந்த நிலையில் தேர்தல் விதிமுறைகளை அப்பட்டமாக மீறியிருக்கின்றது மத்தியில் ஆளும் பாஜக .

ADVERTISEMENT


தேர்தல் பிரச்சார நிறைவிற்கு பிறகு குறிப்பிட்ட வேட்பாளர் ஆதாயம் அடையும் வகையில், அவரோ அவர் சார்பாக யாரேனும் ஒருவரோ பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்தக் கூடாது என்பது தேர்தல் நடத்தை விதிமுறைகளுள் ஒன்று.. எனினும் அத்தகைய விதிமுறையை, சிவகங்கை மக்களவைத் தொகுதி வேட்பாளர் ஹெச்.ராஜாவிற்காக அப்பட்டமாக மீறியுள்ளது பாஜக தரப்பு.

புதன்கிழமையன்று சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலுள்ள தமிழ்நாடு பிராமணர் சங்க கட்டிடத்தில் இரவு 7:45 மணியளவில் பத்திரிகையாளர்களை சந்தித்தார் நொய்டா மாநிலத்தில் வருமான வரித்துறை அதிகாரியாக பணிபுரியும் சஞ்சீவ் ஸ்ரீவத்சவா. எடுத்த எடுப்பிலேயே, " இங்கு காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் கார்த்திக் சிதம்பரம் ஊழல்வாதி " என நேரிடையாக தாக்குதல் பாணியைக் கடைபிடிக்க., " பாலியல் குற்றஞ்சாட்டப்ட்டு தண்டனைப் பெற்றதற்காகவும், அதன் பின்னணியில் ப.சிதம்பரம் இருந்ததாகவும் அதற்கு பழிவாங்குதற்காக தான் இந்த ஏற்பாட்டினை எடுத்துள்ளதாகவும் கூறுகிறார்களே."? எனப் பத்திரிகையாளர்கள் கேள்வி கேட்க அங்கு அமளி ஏற்பட்டது.

இவ்வேளையில், தகவல் அறிந்து அந்தக் கூட்டத்திற்கு வந்த காவல்துறையினரும், வருவாய்த்துறையினரும், "இது அப்பட்டமான தேர்தல் விதிமுறை மீறல் " எனக்கூறி கூட்டத்தினை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை வைக்க, எனினும் சட்டை செய்யவில்லை பாஜகவினர்.

மாவட்ட நிர்வாகமும் அமைதியாக கையாளுங்கள் என அறிவுறுத்த அரைமணி நேரம் அமைதி காத்து மீட்டிங்கை முடித்து வைத்தது வருவாய்த்துறை மற்றும் காவல்துறை. கை கட்டி வேடிக்கை பார்த்த மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து புகார் கொடுத்துள்ளனர் காங்கிரஸார். இதனால் இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT