ADVERTISEMENT

நெசவைத் தொலைத்துவிட்டு நாடு நிர்வாணமாகப்போகிறதா? காரப்பன் கேள்வி...

07:33 PM Oct 21, 2019 | rajavel

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்த சிறுமுகையைச் சேர்ந்தவர் காரப்பன். தேசிய கைத்தறி பயிற்சியாளர். காரப்பன் சில்க்ஸ் உரிமையாளரான இவர், கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி கோவையில் நடந்த கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசினார்.

ADVERTISEMENT

அப்போது அவர், பேசப்படாத மிகப்பிரம்மாண்டமான ஒரு துறை இந்த நாட்டில் இருக்கிறது. அது கைத்தறி நெசவுத் தொழில். எல்லோரும் நெசவுத் தொழில் என்றால் பாவம், பரிதாபம், ஏழை நெசவுத் தொழிலாளி என்பார்கள். நான் அப்படி அல்ல. என்னைப்போன்ற விஞ்ஞானி, பல்கலைக்கழகத்திற்கே அதிபராகும் தகுதி இந்த நாட்டில் உள்ள நெசுவுத் தொழிலாளர்களுக்கு இருக்கிறது. இன்றுவரை எந்த ஒரு நெசவாளியையும் எந்த பல்கலைக்கழகம் அடையாளப்படுத்தவில்லை.

ADVERTISEMENT


நான் நெய்யும் இடம் தூசி. விற்கும் இடம் ஏசி. நெய்கிறவன் ஏழை, வாங்குகிறவன் பணக்காரன். இந்த நாட்டில் மிகப்பிரம்மாண்டமான ஒரு துறை இருக்கிறது என்றால் அது நெசுவுத் தொழில். சமீபத்தில் நம்ம கல்வித்துறை அமைச்சரிடம் பேசும்போது, கைத்தறிக்கு ஒரு பாடத்திட்டடம் கொண்டுவரலாம் என்று கேட்டேன். நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்றார், நான் பட்டுச்சேலை நெய்கிறேன் என்றேன். ஏன் வேட்டி நெய்ய வேண்டியதுதானே என்றார்.

நான் வேட்டி நெய்திருந்தாலும் பணக்காரன் ஆகியிருப்பேன். பட்டு நெய்தால் அதைவிட பணக்காரனாகியிருப்பேன். ஏனென்றால் என்னுடைய தொழில் பிளாட்பாரத்தில் கிடையாது. இன்றைக்கு கார், பைக் எல்லாமே பிளாட்பாரத்திற்கு வந்துவிட்டது. ஆனால் என்னுடைய கைத்தறி பிளாட்பாரத்தில் இருந்து ஏசிக்கு போய்விட்டது.

நான் நிறைய ஊடகங்களில் பேசியிருக்கேன். ஏனோ தெரியவில்லை. இந்த நெசவைத் தொலைத்துவிட்டு நாடு நிர்வாணமாகப்போகிறதா? படித்த வேலைக்கு பலபேர் ஓட்டம், பாக்கி வேலைக்கு ஆள் திண்டாட்டம். அப்பன் வேலையை அவனது பிள்ளை சொப்பணத்திலும் நினைப்பதில்லை. இன்றைக்கு படித்தவர்களுக்கு வேலை இருக்கிறதா? எங்களுக்கு ஆளே இல்லை.

எட்டு லட்சம் அட்வாண்ஸ் கொடுக்கிறார்கள் நெசவாளிக்கு. விசைத்தறி தொழிலாளிக்கு இரண்டு லட்சம் அட்வாண்ஸ் கொடுக்கிறார்கள். இந்த நாட்டில் எந்த வேலைக்கு அட்வாண்ஸ் கிடைக்கிறது. வீடு தேடி சம்பளம் வரும் ஒரே துறை நெசவுத் துறை. அதைப்பற்றி பேசுவதற்கு ஒரு அரசியல்வாதி இல்லை. நெசவாளிகளை யாரும் அடையாளம் காட்டவில்லை.

சமீபத்தில் காஞ்சிபுரத்தில் அத்திவரதருக்கு 48 நாளும் 7 அடியில் தினமும் ஒரு புடவை. காலில் செருப்பு அணியாமல், ஒழுங்காக சாப்பிடாமல், பொண்டாட்டிக்கூட பேசாமல், பக்தியோடு நெசவு செய்வான் நெசவாளி. அந்த சேலையை பக்தியோட அத்திவரதருக்கு கொடுப்பான். அத்திவரதர் அதனை கட்டிக்கொண்டு நிற்பார். ஆனால் அந்த நெசவாளியை இன்றுவரை அடையாளம் காட்டவில்லை. எங்களுடைய வேலைவாய்ப்பை அடுத்த தலைமுறைக்கு கொண்டுபோக என்ன வழி இருக்கிறது. ராக்கெட் விடும் விஞ்ஞானியை உருவாக்க முடியும். நெசவாளியை உருவாக்க முடியாது. ஏனென்றால் அது தாய்வழியாக வந்த தொழில். அதை அநாவசியமாக தொலைத்துவிட்டோம். இனி யாரை வைத்து அதனை விரிவுப்படுத்தப்போகிறோம். மிகப்பெரிய கேள்விக்குறி. இந்த கைத்தறித் தொழிலைப் பற்றி யாரும் எந்த மேடையில் பேசுவதுகிடையாது என்றார்.

பேச்சினிடையே, ''இந்து கடவுள் கிருஷ்ணரை, அத்திவரதரை இழிவாக பேசியதாக சிறுமுகை காரப்பனை கைது செய்ய வேண்டும்'' என கோவை மாநகர போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் சில இந்து அமைப்புகள் போராட்டமும் நடத்தியது.

இந்த நிலையில் காரப்பன் மகன் தண்டபாணி, 'எனது தந்தை காரப்பன் அவர்கள் எனது இந்து மக்கள் மனதை புன்படுத்தும் விதமாக கடவுளை பேசியது ரொம்பவும் கடுமையானது என்னாலும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்கு உங்கள் போராட்டம் வரவேற்க தக்கது தான். எனது ஆதரவும் உண்டு. 27 வருடங்கள் காரப்பன் சில்க்ஸ் நடத்தி வருவது நான் தான் என்று நீங்கள் அனைவரும் அறிந்ததே. நான் இந்து மதம் சார்ந்தும் தெய்வ பக்தியுடனும் தான் இருக்கிறேன் இந்து மதத்தின் எதிரானவன் அல்ல என்பதும் உங்களுக்கு தெரியும். 500க்கும் மேற்பட்ட இந்து குடும்பங்கள் காரப்பன் சில்க்ஸ் நிறுவனத்தை சார்ந்து வாழ்கிறார்கள் என்பதும் உங்களுக்கு தெரியும். காரப்பன் அவர்கள் பேசியது மிகப்பெரிய தவறு ஏற்று கொள்கிறேன் என கூறியுள்ளார்.

காரப்பன் வீடியோ வாட்ஸ் அப்பில், எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள். ஒரு கூட்டத்தில் நெசவுத் தொழில் பற்றி பேசும்போது, இந்து மக்களின் நம்பிக்கை உள்ள கடவுளை பற்றி பேசும்படி ஒரு வார்த்தை வந்துவிட்டது. அதற்கு நான் மிகவும் வருந்துகிறேன். ஏன் இதுவரைக்கும் யாரும் கைத்தறிப் பற்றி பேசவில்லை என்றால் இதுவாகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன். இனிமேல் நானும் இதைப்பற்றி பேசப்போவதில்லை. அது எனக்கு தேவையும் இல்லை. என்னை மன்னித்துவிடுங்கள். இனி இந்த வார்த்தை என்னுடைய வாயில் இருந்து வராது என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT