bjp

Advertisment

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த வைரஸால் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் உயர்ந்துள்ளது. வைரஸ் பரவாமல் தடுப்பதற்காகப் பொது இடங்களில் மக்கள் கூடுவதைத் தவிர்ப்பதற்காக இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பலரின் வேலைகள் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. குறிப்பாகத் தினக்கூலியை நம்பியுள்ள தொழிலாளர்களின் வாழ்வாதாரம் மிகவும் கவலைக்கிடமாகியுள்ளது. இதனைத் தவிர்க்க பல பிரபலங்கள், பல அறக்கட்டளைகள் கஷ்டப்படும் மக்களுக்கு உதவி செய்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாமுழுவதும் மதுக் கடைகளை ஆங்காங்கே திறந்து வருகின்றனர்.

Advertisment

இந்த நிலையில் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் நடிகர் விஜய் சேதுபதியுடன் சமீபத்தில் நேரலை கலந்துரையாடல் ஒன்றைநடத்தினார்.அதில், பேசும் போது "தியாகய்யர், ராமனைப் போற்றி தஞ்சாவூர் வீதிகளில் இரந்து பாடியதைக்"குறிப்பிட்டுப்பேசினார். நடிகர் கமல் பேசிய இந்தக் கருத்துக்கு பாஜகவின் தேசிய செயலாளர் எச்.ராஜா தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார். அதில், "சங்கீத மும்மூர்த்திகளில் முதன்மையானவர் தியாகய்யரை இழிவாகப் பேசியுள்ள கமல்ஹாசனின் அநாகரிகச் செயலை வன்மையாகக் கண்டிக்கிறேன். கர்நாடக இசைப் பிரியர்கள் இவரை அனைத்து விதங்களிலும் புறக்கணிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.