ADVERTISEMENT

ஒரே நேரத்தில் வங்கக்கடல், அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி- இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல்!

09:20 AM Oct 14, 2021 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனையொட்டி உள்ள பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. கடந்த 10 ஆம் தேதியே காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என எதிர்ப்பாக்கப்பட்ட நிலையில் தாமதமாக உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்குத் தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பிருக்கும் என அறிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், அடுத்த 24 மணிநேரத்தில் ஒடிசா-ஆந்திர பகுதியை நோக்கி இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி செல்லும் எனத் தெரிவித்துள்ளது. அதேபோல் ஒரே நேரத்தில் வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பலத்த காற்று வீசும் என்பதால், வங்கக்கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். இதனால் தமிழ்நாட்டில் 15ஆம் தேதிவரை மிகக் கனமழையும், 16ஆம் தேதி கனமழையும் பொழிய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு நேற்றே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT