ADVERTISEMENT

எளிமையான இ-பாஸ்; சுங்கச்சாவடியில் கூட்ட நெரிசல்

08:07 AM Aug 17, 2020 | kalaimohan

ADVERTISEMENT

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக இ-பாஸ் நடைமுறை என்பது தொடர்ந்து அமலில் உள்ள நிலையில், எதிர் கட்சிகள் உட்பட பல அரசியல் கட்சிகள் இ-பாஸ் மக்களுக்கு தேவையற்ற மன உளைச்சலையும், லஞ்ச ஊழல்களையும் உருவாக்குகிறது எனவே இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்யக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி வந்தனர்.

ADVERTISEMENT

இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இ-பாஸ் நடைமுறையில் தளர்வுகளை அறிவித்திருந்தார். ஆதார் எண், ரேஷன் கார்டு, தொலைபேசி எண் ஆகியவற்றை சமர்ப்பித்து விண்ணப்பித்தால், விண்ணப்பித்த அனைவருக்கும் இ-பாஸ் கிடைக்கும் என அறிவித்திருந்தார். அதேபோல் இந்த தளர்வு வரும் 17ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில் இ-பாஸ் பெறுவது எளிதானதால் சென்னையில் நுழைவுவாயிலான பரனூர் டோல்கேட்டில் வாகனங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்களில் சென்னைக்கு வருபவர்கள், சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

திருமணம், அவசர மருத்துவ சிகிச்சை, இறப்பு போன்ற காரணங்களுக்கு மட்டுமே முன்னர் இ-பாஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், தற்போது விண்ணப்பிக்கும் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், மிக முக்கியமான தேவைகளுக்கு மட்டுமே இ-பாஸ் பயணங்கள் மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT