ADVERTISEMENT

பொங்கல் முடிந்து பணிக்கு திரும்பும் அரசு ஊழியர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! 

05:32 PM Jan 19, 2020 | kalaimohan

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு கிட்டத்தட்ட பத்து நாட்கள் என்ற அளவிற்கு பொங்கல் விடுமுறை அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விடப்பட்டுள்ளது. இந்த பத்து நாள் விடுமுறையை கழித்துவிட்டு பணிக்கு திரும்பும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த ஆண்டு இனி நீண்ட விடுமுறையே கிடையாது என்ற அதிர்ச்சித்தகவல் காத்திருக்கிறது.

ADVERTISEMENT


பொங்கலை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நீண்ட விடுமுறை விடப்பட்டது. ஆனால் இதேபோல் தொடர் விடுமுறை இந்த ஆண்டு முழுவதுமே இனி கிடையாது, ஏனெனில் வருகின்ற அனைத்து விடுமுறை பண்டிகை நாட்களும் பெரும்பாலாக சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் இந்த நிலை.

உதாரணமாக குடியரசு தினம் ஞாயிற்றுக் கிழமையில் வருகிறது. அதேபோல் தெலுங்கு வருடப் பிறப்பு மார்ச் 25ஆம் தேதியும், ஏப்ரல் ஆறாம் தேதி மகாவீர் ஜெயந்தி விடுமுறை என அடுத்தடுத்த விடுமுறைக்காக நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு வரப்போகும் பக்ரீத், சுதந்திர தினம், விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை, தீபாவளி ஆகியவை சனி ஞாயிற்றுக் கிழமைகளில் வருவதால் இந்த ஆண்டு முழுவதும் பெரிய அளவில் தொடர்ச்சியாக விடுமுறை நாட்களை எதிர்பார்க்க முடியாது.

ADVERTISEMENT
ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT