ADVERTISEMENT

மேற்குவங்க மாணவிக்கு பாலியல் வன்கொடுமை...? சென்னை ஐஐடியில் அதிர்ச்சி!

09:21 AM Mar 27, 2022 | kalaimohan

ADVERTISEMENT

ADVERTISEMENT

சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த மாணவி சக மாணவர்களால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதாகப் புகார்கள் எழுந்த நிலையில் இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரிக்க வேண்டும் என அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தைச் சேர்ந்த பட்டியலின மாணவி ஒருவருக்கு 3 மாணவர்கள் பாலியல் தொந்தரவு கொடுத்து வந்த நிலையில், இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட மாணவி துறை பேராசிரியரிடம் புகார் கொடுத்த போதிலும் அதன்மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று இந்திய ஜனநாயக மாதர் சங்கம் குற்றம்சாட்டியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய ஐஐடியின் 'உள் புகார் கமிட்டி' அறிக்கை அளித்த போதிலும் ஐஐடி நிர்வாகம் தரப்பில், இந்த பாலியல் புகார் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனத் தெரிவித்துள்ள ஜனநாயக மாதர் சங்க பொதுச்செயலாளர் சுகந்தி, நிர்வாகத்தால் நடவடிக்கை எடுக்கப்படாததால் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் காவல்நிலையத்திலும் நடவடிக்கை எடுக்கப்படாததால் பாதிக்கப்பட்ட மேற்குவங்க மாணவி கடந்த 22ஆம் தேதி மாநில மகளிர் ஆணையத்தில் புகார் அளித்திருந்தார். எனவே இந்த புகாரை சிபிசிஐடிக்கு மாற்றி எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என மாதர் சங்கம் சார்பில் வலியுறுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பான விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பு அளிப்பதாகவும், மாணவிக்கு துணை நிற்போம் எனவும் தெரிவித்துள்ளது ஐஐடி நிர்வாகம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT