ADVERTISEMENT

 81 அடி உயரத்தில் உயர்ந்து நிற்கும் சிவன்! களைகட்டும் மகா சிவராத்திரி!

03:27 PM Mar 08, 2024 | ArunPrakash

தமிழ்நாட்டில் உயரமாக முழு உருவத்தில் எழுந்து நின்று தோற்றமளிக்கும் சிவன் சிலை புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலத்தில் உள்ளது. 81 அடி உயரத்தில் சிவனும் ஏழேகால் அடி உயரத்தில் தலைமைப் புலவர் நக்கீரரும் சிலையாக நிற்கும் கீரமங்கலம் நோக்கி மகாசிவராத்திரியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் இருந்து ஏராளமான பக்தர்களின் வருகை தொடங்கியுள்ளது.

ADVERTISEMENT

கீரமங்கலத்தின் மையப் பகுதியில் பேருந்து நிலையம் அருகே 1000 ஆண்டுகள் பழமையான ஒப்பிலாமணி அம்பிகை உடனுறை மெய்நின்றநாதர் ஆலயம் உள்ளது. 800 ஆண்டுகளுக்கு பிறகு கோயில் முன்பு உள்ள தடாகத்தில் 81 அடி உயரத்தில் பிரமாண்ட முழுஉருவ சிவன் சிலையும், சிவனிடம் உண்மைக்காக தர்க்கம் செய்த இடமாக கருதப்பட்டதால் தலைமைப் புலவர் நக்கீரருக்கு ஏழேகால் அடியில் கல்சிலையும் அமைத்து பழமையான கோயிலை பழமை மாறாமல் புதுப்பித்து 800 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016ல் சிலைகள் திறப்பு மற்றும் குடமுழுக்கு நடத்தப்பட்டது. அதை லட்சக்கணக்கில் பக்தர்கள் தரிசனம் செய்தனர் .

ADVERTISEMENT

குடமுழுக்கு செய்யப்பட்ட பிறகு உயரமான சிவனைப் பார்க்க தமிழகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் வரும் சிவ பக்தர்களின் வருகை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதே போல மகாசிவராத்திரி நாளில் மகா சிவனைக் காண தமிழ்நாடு முழுவதிலும் இருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சிவன் சிலை அமைந்துள்ள தடாகத்தில் கிரிவலம் சென்று, இரவு தங்கி இருந்து அதிகாலை செல்கின்றனர். இந்த வருடமும் அதிக பக்தர்கள் கூட்டம் வரலாம் என்பதால் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT