ADVERTISEMENT

காவல் ஆய்வாளரால் 10 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை;நான்கு மாதமாக மிரட்டி வன்கொடுமை செய்ததாக சிறுமி வாக்குமூலம்!!

06:09 PM Dec 02, 2018 | kalaimohan

ADVERTISEMENT

சென்னை வில்லிவாக்கத்தில் 10 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளரை போஸ்கோ சட்டத்தின்கீழ் மகளிர் போலீசார் கைது செய்துள்ளனர்.

ADVERTISEMENT

சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த வாசு என்பவர் மாதவரம் பால்பண்ணை காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். 57 வயதான இவன். அடுத்த ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற இருக்கின்ற நிலையில் நேற்று இரவு வில்லிவாக்கத்தில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 10 வயது சிறுமியை அழைத்துச் சென்ற ஆய்வாளர் வாசு பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு எழுந்தது.

அந்த சம்பவத்தின் போது கதறி அழுத சிறுமியின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து சிறுமியை காப்பாற்றினர். அந்த இடத்தில் இருந்து தப்பிச்சென்றுள்ளான் உதவி ஆய்வாளர் வாசு, சிறுமியிடம் நடந்தது பற்றி விசாரித்த பொதுமக்கள் அதிர்ச்சியுடன் தப்பித்துச் சென்ற உதவி ஆய்வாளர் வாசுவை பிடித்து அந்த இடத்திலேயே தர்மஅடி கொடுத்து வில்லிவாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இருப்பினும் காவல் துறையினர் இது தொடர்பாக புகார் ஏதும் பெறாமல் இருந்த நிலையில், இந்த தகவல் உயர் அதிகாரிகளின் கவனத்திற்கு சென்றது. பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கவும், அதேபோல் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட உதவி ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுப்பதற்கான விசாரணை துவக்கவும் உத்தரவிட்டது உயர் அதிகாரிகள் தரப்பு.

இந்த உத்தரவின் அந்த குழந்தையிடம் நடைபெற்ற விசாரணையில் கடந்த நான்கு மாதமாக தன்னை விரட்டி வன்கொடுமை செய்ததாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தது. சிறப்பு உதவியாளர் குறித்து விசாரணை செய்த வில்லிவாக்கம் போலீசார் போஸ்கோ சட்டத்தில் வழக்குப் பதிந்து கைது செய்துள்ளனர்.

பொறுப்பில் உள்ளவர் அதுவும் காவலர் பொறுப்பில் உள்ளவர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT