ADVERTISEMENT

கயிற்றில் சிக்கிய ராட்சத பேனர்; அடுத்தடுத்து படுகாயமடைந்த வாகன ஓட்டிகள்

06:15 PM Apr 02, 2024 | ArunPrakash

வேலுார் சத்துவாச்சாரியில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலக மேம்பாலத்தில் இருந்து கிரீன் சர்க்கிள் செல்லும் சார்வீஸ் சாலை அருகில் சுமார் 50 அடி உயரத்தில் ராட்சத விளம்பரம் போர்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஏற்கனவே இருந்த டிஜிட்டல் பேனரை மாற்றி புது பேனர் அமைக்கும் பணியில் 6 ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர். அதில், 3 ஊழியர்கள் கீழே நின்றுகொண்டிருந்த நிலையில், மேலே 3 ஊழியர்கள் ஏறி பேனரை கட்டிக் கொண்டிருந்தனர். அப்போது, விளம்பர போர்டில் கட்டப்பட்டிருந்த பைபர் கேபிள் ஒயர் அறுந்து கீழே விழுந்துள்ளது.

ADVERTISEMENT

இச்சமயம் காகிதப்பட்டறையில் இருந்து சத்துவாச்சாரி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்ற காதிப்பட்டறை பகுதியைச் சேர்ந்த பால் வியாபாரி கிருஷ்ணா (28) என்பவர் அந்த கேபிள் ஒயரில் சிக்கி தூக்கி வீசப்பட்டதில் தலையில் பலத்தகாயம் ஏற்படவே அவருக்கு வலிப்பு ஏற்பட்டுள்ளது. அருகில் இருந்தவர்கள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதேநேரம், கணியம்பாடி அடுத்த கத்தாழம்பட்டு பகுதியைச் சேர்ந்த தனியார் கம்பெனி ஊழியர் வெங்கடேஷ் (23) என்பவர் சத்துவாச்சாரியில் இருந்து புதிய பேருந்து நிலையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றபோது, அவரது கழுத்திலும் அந்த கேபிள் ஒயர் மாட்டி கீழே விழுந்தில் கழுத்து, கை, கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது.

ADVERTISEMENT

அடிபட்ட இருவருக்கு எந்தவித முதலீடு செய்யாமல் மூன்று பேர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்து அங்கு திரண்ட இளைஞர்கள் சிலர் 50 அடி உயரத்தில் மேலே பேனர் கட்டிக்கொண்டிருந்த 3 பேரை தாக்குவதற்காக கீழே இறங்கச்சொல்லி சத்தம்போட்டனர். பதறிப்போன 3 பேரும் கீழே இறங்கினால் தாக்கப்படுவோம் என்ற அச்சத்தில் இறங்கி வராமல் மேலே இருந்தனர்.

இது குறித்து தகவலறிந்த வேலூர் டிஎஸ்பி திருநாவுக்கரசு சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டார். வேலூர் வடக்கு காவல்துறையினர் மேலே இருந்த 3 பேரையும் பத்திரமாக கீழே இறக்கி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகின்றனர். இந்த விவகாரத்தில் விளம்பர பேனர் அமைத்த நிறுவனத்தினர் எங்கள் மீது எந்த வழக்கும் பதிவாகி விடக்கூடாது என பெரிய அளவில் பேரம் நடப்பதாக கூறப்படுகிறது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT