cargo truck suddenly caught destroying electrical goods worth several lakhs

Advertisment

வேலூர் மாவட்டம், பள்ளிகொண்டா தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை மாவட்டத்திலிருந்து பூனேவுக்கு சரக்கு ஏற்றிச்செல்லும் லாரியின் மூலம் தனியார் நிறுவனத்தில் இருந்து பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்தது. பள்ளி கொண்டா அருகே உள்ள பொய்கை பகுதியில் சாலையில் வந்து கொண்டிருந்தபோது திடீரென தீப்பிடித்து எரிந்தது.

இதில் உள்ளே இருந்த மின்சாதனப் பொருட்கள் தீயில் கருகி கொண்டு இருந்ததால். சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த நிலையில் வேலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. விரைந்துவந்த தீயணைப்புத் துறை வீரர்கள் தீயணை அனைத்தனர். ஆனாலும்பல லட்சம் மதிப்புடைய மின்சாதனப் பொருட்கள் தீயில் கருகியது இதனை அடுத்து விரிஞ்சிபுரம் போலீசார் சம்பவ இடத்தில் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.