ADVERTISEMENT

‘கறுப்பர் கூட்டம்’ செந்தில்வாசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது..!

09:32 AM Jul 28, 2020 | suthakar@nakkh…

ADVERTISEMENT

‘கறுப்பர் கூட்டம்' என்ற யூடியூப் சேனலில் 'கந்த சஷ்டி கவசம்' குறித்து தரக்குறைவாக விமர்சித்ததாகவும், இது இந்துக்களின் உணர்வுகளை இது புண்படுத்தியுள்ளதாகவும் தமிழக பா.ஜ.க சார்பில் சென்னை காவல் ஆணையரிடம் சில நாட்களுக்கு முன்பு புகார் அளிக்கப்பட்டது.

ADVERTISEMENT

அதனையடுத்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கறுப்பர் கூட்டம் யூடியூப் சேனலின் உரிமையாளர் செந்தில்வாசன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். அதையடுத்து அதன் தொகுப்பாளரான நாத்திகன் என்கிற சுரேந்திரன் நடராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரியிருந்தார். இந்நிலையில் புதுச்சேரியில் இருந்தபடி தமிழக போலீசாரிடம் அவர் சரணடைந்தார். புதுச்சேரியில் சரணடைந்த சுரேந்திரனை தமிழக போலீசார் சென்னை அழைத்து வந்தனர். எழும்பூர் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்பட்ட சுரேந்திரனுக்கு 30- ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று சென்னை மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவின்பேரில், கறுப்பர் கூட்டம் சுரேந்திரன் மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதைதொடர்ந்து தற்போது செந்தில்வாசன் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT