ADVERTISEMENT

குழந்தைகளைக் கொன்றுவிட்டேன்... நீயும் நானும் இப்பவே செத்துப் போவோம்... கடப்பாறையை எடுத்த கணவன்... அலறியடித்து ஓடிய மனைவி...

08:26 PM Aug 15, 2020 | rajavel

ADVERTISEMENT

ஏதாவது ஒன்றை நினைத்து மனதைப் போட்டுக் குழப்பிக் கொண்டே இருப்பார்கள், சிலர். அப்படி ஒரு மனிதரான காளிராஜ், வீண் குழப்பத்திற்கு ஆளாகி, தனது இரண்டு குழந்தை களைக் கொலையே செய்துவிட்டார்.

ADVERTISEMENT

யார் இந்த காளி ராஜ்? அவருக்கு அப்படியென்ன குழப்பம்!

சிவகாசி - செங்கமலப்பட்டியைச் சேர்ந்த காளிராஜ், அருகிலுள்ள திருத்தங்கல் அரசு கால்நடை மருத்துவமனையில் கால்நடை ஆய்வாளராகப் பணிபுரிந்தார். தனது சமுதாயத் தவரான தங்கபுஷ்பத்தைக் காதலித்து, 2013-ல் திருமணம் செய்துகொண்டார். மாரீஸ்வரன், காயத்ரி ஆகிய இரு குழந்தைகள் பிறந்து, சந்தோஷத்துக்கு ஒரு குறைவும் இல்லாமல் குடும்ப வாழ்க்கை சுமுகமாகவே நகர்ந்தது. ஆனாலும், காளிராஜ் "ஜொள்ளு' ஆசாமியாக இருந்ததால், மனைவி மட்டும் அவருக்குப் போதுமானதாக இல்லை. வெளியில் தேட ஆரம்பித்தார். வெளியூர் சென்றிருந்தபோது, அந்த எண்ணம் தலைதூக்க, பாலியல் தொழிலாளி ஒருவரிடம் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

ஊர் திரும் பியதும், குழப்ப வாதியான காளி ராஜுக்கு ‘பால் வினை நோய்’ குறித்த பயம் தொற்றிக்கொண்டது. மனைவியுட னான தாம்பத்தியத்தால் மேலும் பீதியானார். சிவகாசி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனையில், குடும்பத்தோடு சென்று மருத்துவப் பரிசோதனை செய்துகொண்டார். அவர் நினைத்ததுபோல், முதல்கட்ட பால்வினை நோயோ, எய்ட்ஸ் தொற்றோ, எதுவும் யாருக் கும் இல்லை என்று முடிவுகள் வந்தன. ஆனா லும், எச்.ஐ.வி. தொற்று பல ஆண்டுகளுக்கு வெளியே தெரியாமல் இருந்து, பின்னரே தெரியவரும் என்று எப்போதோ படித்தது, அவர் மனதைப் பிசைந்தது.

இருக்கவே இருக்கிறது கூகுள். அதில் இல்லாத விஷயங்களா? தேடினால் தீர்வு கிடைத்துவிடப் போகிறது என்று, தனது ஆன்ட்ராய்டு செல்போனில், கூகுளில் விடை தேட, சந்தேகம் மேலும் வலுத்தது. ஏனென்றால், பால் வினை நோய் மற்றும் எச்.ஐ.வி. தொற்றுக்கான அறிகுறிகள் என கூகுள் தேடலில் குறிப்பிடப்பட்டிருந்தவை, தனக்கும் இருப்பதாகக் கருதினார். இதை மறக்கவோ, மறைக்கவோ முடியாது எனத் தொடர்ந்து அது குறித்தே சிந்தித்ததால், பிதற்ற ஆரம்பித்தார். ""இந்த நோயை வைத்துக்கொண்டு இனி உயிர் வாழ முடியாது.. குடும்பத்தோடு தற்கொலை செய்து உயிரை விடுவோம்...'' என்று மனைவியிடம் கூற, வீட்டில் ஓயாத சண்டை ஆனது. நிம்மதியிழந்த காளிராஜ், இரண்டு மாதங்களாக வேலைக்குச் செல்லவில்லை.

கடந்த மாதம், பட்டாசு வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய தங்கபுஷ்பத்துக்கு அதிர்ச்சி காத்திருந்தது. குழந்தைகள் இருவரும் கொல்லப்பட்டு சடலமாகக் கிடந்தனர். அங்கு புலம்பியபடி உட்கார்ந்திருந்த காளிராஜ் குழந்தைகளைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டேன். நீயும் நானும் இப்பவே செத்துப் போவோம்.’என்று கடப்பாறையால் மனைவியைத் தாக்க முற்பட்டார். அவர் அலறியடித்துக்கொண்டு வீட்டிலிருந்து வெளியில் வர, அக்கம்பக்கத்தினர் கூடிவிட்டனர். தற்கொலை செய்துகொள்ளும் முடிவில் இருந்த காளிராஜ் அவர்களிடம் சிக்காமல், உயிர் பயத்தில் ஓடிவிட்டார்.

மனைவி தங்கபுஷ்பம் புகார் அளிக்க, சிவகாசி கிழக்கு காவல்நிலைய போலீசார் காளிராஜுவை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது, நான் கொலை செய்ததற்குக் காரணமே கூகுள்தான்... என்று பழியை கூகுள் மீது சுமத்த, ‘ரிமாண்ட்’ செய்யப்பட்டு, சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார், காளிராஜ்.

-ராம்கி

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT