ADVERTISEMENT

தமிழகக் கூலி தொழிலாளியை கொன்ற பால்ரஸ் குண்டுகள். – ஆந்திரா போலிஸ்சின் வெறி.

06:35 PM Sep 17, 2018 | raja@nakkheeran.in

ADVERTISEMENT

கடந்த ஆகஸ்ட் 31ந்தேதி இரவு திருப்பதியை அடுத்த காளஸ்திரி வனப்பகுதியில், செம்மரம் வெட்டச்சென்ற 30 பேர் கொண்ட கும்பலை கண்டு அவர்களை பிடிக்க ஆந்திரா வனத்துறையினர் முயன்றதாகவும், அவர்கள் சிக்காமல் வனத்துறையினர் மீது கற்களை வீசிவிட்டு தப்பிஓடியதாகவும், தங்களை காப்பாற்றிக்கொள்ள துப்பாக்கி சூடு நடத்தியதாகவும், அதில் திருவண்ணாமலை மாவட்டம், ஜம்னாமத்தூர் தாலுக்காவை சேர்ந்த கண்ணமலையை சேர்ந்த காமராஜ் என்பவரின் இடுப்பில் துப்பாக்கி தோட்டா பாய்ந்து சம்பவயிடத்திலேயே இறந்ததாகவும், மற்றொருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காளஸ்திரி போலிஸார் ஆகஸ்ட் 1ந்தேதி மதியம் தகவலை வெளியிட்டனர்.

ADVERTISEMENT


ஆந்திரா வனத்துறையின் இந்த நடவடிக்கை தமிழக மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இது திட்டமிட்ட படுகொலையென மக்கள் கண்காணிப்பகத்தின் மனித உரிமை பிரிவு காமராஜ்ஜை போலிஸ் தற்காப்புக்காக சுடவில்லை, அவரை பிடித்து என்கௌண்டர் செய்துள்ளது என குற்றம்சாட்டியது. அதோடு, அவரது மகன் ராம்ராஜ் மூலமாக மறு உடற்கூறாய்வு செய்யவேண்டும்மென ஐதராபாத் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அந்த வழக்கில் முகாந்திரம் இருப்பதை அறிந்த உயர்நீதிமன்றம் மறுஉடற்கூராய்வுக்கு உத்தரவு வழங்கியது.

அதன்அடிப்படையில் இன்று செப்டம்பர் 17ந்தேதி காளஸ்திரி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற உடற்கூராய்வில், காமராஜ் உடலில் இருந்து பால்ரஸ் குண்டுகள் (சைக்கிள் வீலில் உள்ள பால்ரஸ்) 7 எடுக்கப்பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதோடு, காமராஜ் இடுப்பில் 6 இன்ச் அளவுக்கு குண்டு பாய்ந்த அடையாளம் உள்ளது. 6 இன்ச் என்பது மிக அருகில் இருந்து சுட்டால் தான் இப்படியாகும் என்கிறார்கள். போஸ்ட்மார்டம் முடிந்து உடல் குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அவரது உடல் காமராஜ்ஜின் சொந்தவூரான கானாமலைக்கு கொண்டுவரப்படுகிறது, நாளை இறுதி காரியங்கள் நடைபெறும் என்கிறார்கள்.

ஈழத்தில் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் பாஸ்பரஸ் குண்டுகள் என்கிற கொத்து குண்டுகளை வீசி கொன்றதை பார்த்தோம். ஆந்திராவில் மரம் வெட்டச்சென்ற அப்பாவிகள் மீது பால்ரஸ் குண்டுகள் மூலம் கொல்லப்பட்டுள்ள தகவல் அதிர்வை ஏற்படுத்துகிறது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT