ADVERTISEMENT

"பறிமுதல் செய்யப்படும் கஞ்சா இனி மூன்று மாதத்திற்குள் அழிக்கப்படும்"- உயர்நீதிமன்றக் கிளையில் தமிழ்நாடு அரசு தகவல்!

06:23 PM Sep 21, 2021 | santhoshb@nakk…

ADVERTISEMENT

கஞ்சா விற்பனை வழக்குகளில் ஜாமீன், முன் ஜாமீன் தரக்கோரிய வழக்குகள் இன்று (21/09/2021) மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் விசாரணைக்கு வந்தது.

ADVERTISEMENT

அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், 'பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவை அழிப்பதற்கு 6 சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இனி வரும் காலங்களில் பறிமுதல் செய்யப்படும் கஞ்சா மூன்று மாதத்திற்குள் அழிக்கப்படும். பறிமுதல் செய்யப்படும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருளை காவல்நிலையங்களில் வைக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்' என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ஒரு துறையின் மீது குற்றம் சுமத்தும் போது அந்தத்துறை நேர்மையுடன் இருப்பதை நிரூபிக்க வேண்டும். பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சா குறித்து மாவட்ட வாரியாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.


ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT