ADVERTISEMENT

சீமான் ஏன் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை? காங்., கேள்வி

03:48 PM Jul 25, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

வேலூர் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் பொது கூட்டம் நடைபெற்றது. இதில் காட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு அக்கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் தீப லஷ்மிக்கு வாக்கு சேகரித்து பேசினார்.

ADVERTISEMENT

அப்போது அவர் காங்கிரசை தலையில்லா முண்டம் என்று விமர்சித்திருந்தார். இது தமிழக காங்கிரஸ் கட்சியினரை கோபப்படுத்தியுள்ளது. அது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் சிறுபான்மை துறை மாநில தலைவர் அஸ்லம் பாஷா கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

தமிழகத்தில் இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் ஓட்டுப் போட்டு ஜெயிக்க வைத்தது பாஜகவிற்கு பயந்து அல்ல என்பதை சீமான் புரிந்துகொள்ளவேண்டும். இஸ்லாமியர்களும் கிறிஸ்தவர்களும் மதச்சார்பற்ற கொள்கை உடைய கூட்டணிக்கு ஓட்டுப்போட வேண்டும் என்ற எண்ணத்தில் மத்தியில் மதச்சார்பற்ற கூட்டணி வர வேண்டும் என்ற எண்ணத்திலும் தான் ஓட்டு போட்டு வெற்றிபெற வைத்தார்கள். கண்டிப்பாக இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் கண்டிப்பாக திமுக காங்கிரஸ் கூட்டணி கட்சியினுடைய வேட்பாளருக்கு ஓட்டு போட்டு வெற்றிபெற வைப்பார்கள்.

காங்கிரஸ் கட்சியை தலையில்லா முண்டமாக ஒரு தலைவனை தேர்ந்தெடுக்கக் கூடிய தகுதி இல்லாத கட்சியாக இருக்கின்றது என்று சீமான் கூறியது கண்டிக்கத்தக்கது. காங்கிரஸ் கட்சியில் தோல்வியை ஏற்று காந்திய வழியில் இளம் தலைவர் ராகுல் காந்தி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்தார் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் இன்றைய காலகட்டத்திலும் அப்படியே ராஜினாமாவை ஏற்காத அனைத்து தலைவர்களும் அவர் தான் தலைவராக வேண்டும் என்ற நோக்கத்தில்தான் இதுவரையில் தலைவரை தேர்ந்தெடுக்க முடியாத ஒரு சூழ்நிலை இருக்கிறது. அதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

நீங்கள் தான் எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு கட்சி ஆரம்பித்தீர்கள். கட்சி ஆரம்பித்த பிறகு எத்தனை முறை சீமான் ஆகிய நீங்கள் போது தேர்தலில் போட்டி இட்டுள்ளீர்கள். போட்டியிட்டவர்கள் நீங்கள் ஜெயித்தவர்கள் உண்டா, இதுவரையில் ஜெயிக்காத சீமான் அவர்களே! நீங்கள் ஏன் தலைவர் பதவியை ராஜினாமா செய்யவில்லை.

வருமானத்துறைக்கு அச்சப்படும் அளவுக்கு திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்தவர்களும் காங்கிரஸை சேர்ந்தவர்களும் மக்கள் விரோத ஆட்சி நடத்த வில்லை. மக்களுடைய பணத்தை பதுக்க வில்லை. ஊழல் செய்யவில்லை. அதனால் தான் மதசார்பற்ற கூட்டணி ஒன்றை அமைத்து இந்த கருப்பு பணத்தை மீட்போம் என்று சொல்லி பாரதிய ஜனதா கட்சி அரசு கருப்பு பணத்தை வைத்துக்கொண்டு அதனை லஞ்சமாக கொடுத்து கர்நாடக அரசையும் கவிழ்த்து ஆட்சியிலே வருவதற்கான முயற்சியை மேற்கொண்டு வெற்றி பெற்று இருக்கின்றார். என்பது உங்களுடைய கவனத்திற்கு கொண்டு வருகின்றேன்.

திராவிட முன்னேற்றக்கழகம் காங்கிரஸ் கூட்டணி வரும் தேர்தலில் இருக்காது என்று அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக சீமான் பேச்சின் மூலம் தெரிகின்றது. வரும் உள்ளாட்சித் தேர்தலிலும், சட்டமன்ற தேர்தலிலும் கூட்டணி இருக்கும்.

உருது பேசுகின்ற இஸ்லாமியர்கள் தமிழர்கள் இல்லை என்று அடித்துச் சொன்னவர் சீமான். அப்பேர்பட்ட உருது பேசுகின்ற முஸ்லிம்கள் அதிகமாக இருக்கின்ற வேலூர் பாராளுமன்றத்திலே யாரிடம் நீங்கள் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன் என்பது உங்களால் விளக்க முடியுமா? இந்த நாட்டில் வாழ்கின்ற அனைத்து இஸ்லாமியர்கள் இந்த நாட்டினுடைய தமிழன் என்ற கர்வத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அரசியல் காரணமாக உருது பேசுகின்ற முஸ்லிம்கள் தமிழர்கள் இல்லை இந்த நாட்டில் இருக்கக் கூடாது என்று சொன்னவர்தான் இந்த சீமான் என்பதை இங்குள்ள இஸ்லாமியர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ’’என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT