ADVERTISEMENT

 சட்டப்பேரவை செயலாளர் நியமனத்திற்கு  தடை கோரிய வழக்கில் ஆளுநர் செயலாளர் பதிலளிக்க உத்தரவு

07:55 PM Mar 06, 2018 | Anonymous (not verified)

ADVERTISEMENT

சட்டபேரவை செயலாளராக சீனிவாசன் நியமிக்கப்பட்டதிற்கு தடை கோரிய வழக்கிற்கு சட்டபேரவை செயலாளர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ADVERTISEMENT

தமிழக சட்டபேரவையின் செயலாளராக இருந்த பூபதி கடந்த பிப் 28-ம் தேதியுடன் ஓய்வுபெற்றார். இதனையடுத்து சீனிவாசன் என்பவர் புதிய சட்டபேரவை செயலாளராக மார்ச் 5-ம் தேதி நியமிக்கப்பட்டார். இந்த நியமனத்தை ரத்து செய்யக் கோரி சட்டபேரவையின் கூடுதல் செயலர் வசந்தா மலர், இணை செயலர் சுப்ரமணியம் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதில், சட்டபேரவை செயலராக சீனிவாசன் நியமிக்கப்பட்டதில் பேரவையின் விதிகள் பின்பற்றப்படவில்லை. சட்டபேரவை செயலர் நியமனத்திற்கு முன் பணி மூப்பு பட்டியல் வெளியிடவில்லை. அதேபோல சீனிவாசன் நியமனத்திற்கு முன் கூடுதல் செயலர் உள்ளிட்டோரிடம் ஆட்சேபமும் கோரவில்லை. எனவே இந்த நியமனத்திற்கு தடை விதிக்க வேண்டும், அவருக்கு பதிலாக சட்டபேரவை நிர்வாக பிரிவை சேர்ந்த கூடுதல் செயலர், இணை செயலர் அல்லது துணை செயலர் ஆகியோரில் யாராவது ஒருவரை பேரவை செயலராக நியமிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி டி.ராஜா, மனுவுக்கு 2 வார காலத்திற்குள் சட்டபேரவை செயலர் மற்றும் ஆளுநர் செயலாளர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT