ADVERTISEMENT

சீஸன் ஜோர்.... குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு! 

05:05 PM Jul 15, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

கேரளாவில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்ததையடுத்து, அதனை ஒட்டியுள்ள தென்காசியின் குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகமடைந்துள்ளன. கடந்த சில தினங்களாகவே குற்றால மலையின் நீர்ப்பிடிப்பு பகுதியான சதுப்புநில காடுகளில் மழையும் சாரலும் பெய்யவே குற்றால நகரில் குளிர்ந்த சீதோஷ்ணம் நிலவியது.

ADVERTISEMENT

நீர்ப்பிடிப்பு பகுதியில் கொட்டிய மழை காரணமாக குற்றாலத்தின் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்தது. சீசன் ஜோராக களைகட்டியது. தொடர்ந்து குளிர் தன்மை நிலவுவதாலும், தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாகவும், குற்றால மெயினருவி ஐந்தருவி, பழைய குற்றாலம் உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் நேற்று (14/07/2022) மதியத்திற்குப் பிறகு வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. அதன் காரணமாக சில மணி நேரம் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்குத் தடையும் விதிக்கப்பட்டது.

சீசனும் சாரலும் தொடர்ந்து நீடிப்பதால் அருவிகளில் கொட்டுகிற தண்ணீர் குறைவின்றி நீடிக்கிறது. ஆனால் சுற்றுலாப் பயணிகளின் வரத்துக் குறைவாகவே காணப்பட்டது.

ரம்மியமான அருவிகளால் களைக்கட்டுகிறது குற்றாலம்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT