Skip to main content

அடிப்படை வசதியில்லாத ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி..! போதை ஆசாமிகள் அட்டூழியம்..!

Published on 04/02/2020 | Edited on 04/02/2020

 

கோடை வெயில் நெருங்கிக்கொண்டுள்ளது. அத்துடன் கோடை விடுமுறையும் நெறுங்கிக்கொண்டுள்ளது. பள்ளி, கல்லூரி தேர்வு முடிந்ததும் பணம் படைத்தவர்கள் சிம்லா, குளுமணாலி, இமையமலை என்று படையெடுக்க, நடுத்தர குடும்பங்களை சேர்ந்தவர்களின் பட்ஜெட் சுற்றுலாதளத்தில் ஒன்றான ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியும் ஒன்று.

 

Okenakal




தர்மபுரி மாவட்டத்தில் உள்ள ஒகேனக்கல் நீர்வீழ்ச்சி மிகவும் பிரசித்தி பெற்றது என்றாலும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் அறவே இல்லை. சிறுநீர் கழிக்க கழிப்பிடம் சென்றபோது பத்து ரூபாய் அதிரடியாக வசூல் செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
 

மேலும் பரிசலில் பயணம் செய்ய அரசு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள தொகைக்கு மேல் வசூல் செய்யப்படுகிறது. அதேபோல அங்கு வரும் போதை ஆசாமிகளால் பெண்களுக்கு பாதூகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒரு புறம் இருக்க, காதலர்கள் செய்யும் சில்மிஷங்கள் அங்கு குடும்பத்துடன் வருபவர்களை முகம் சுழிக்க வைக்கிறது.
 

எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையும் இதை கவனித்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே பல்வேறு மாநிலங்களில் இருந்து தர்மபுரி மாவட்டத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணத்தில் ஒரு சிறப்பான எண்ணத்தை உருவாக்கும் என்று அங்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்று வந்தவர்கள் தெரிவிக்கின்றனர். 


 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

அபாயத்தில் நின்று ரீல்ஸுக்கு போஸ் கொடுத்த இளைஞர்; கால் இடறி அருவியில் விழும் பகீர் காட்சி

Published on 24/07/2023 | Edited on 24/07/2023

 

A young man posed for reels standing in peril; The scene of Bhakeer tripping and falling into the waterfall

 

கர்நாடகாவில் நீர்ப்பிடிப்பு பகுதியில் தற்போது பலத்த மழை பெய்து வரும் நிலையில், காவிரி ஆற்றில் நீர் திறக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகக் கர்நாடக மாநிலம் உடுப்பி அருகே உள்ள அருவியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், சரத் என்ற இளைஞர் சமூகவலைத்தளத்தில் பதிவிட ரீல்ஸ் செய்வதற்காக அருவியை ஒட்டி இருந்த பாறையில் நின்று கொண்டு போஸ் கொடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய நண்பர் கரைப்பகுதியில் இருந்து அதை வீடியோ பதிவு செய்து கொண்டிருந்த நிலையில், திடீரென கால் இடறி அருவியில் விழுந்து அடித்துச் செல்லப்பட்டார்.

 

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலானது. உடனடியாக மீட்புப் படையினருக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தொடர்ந்து சரத்தின் உடலைத் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. வெள்ளப்பெருக்கு காலங்களில் நீர் நிலைகளில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனப் பலமுறை அறிவுறுத்தல் கொடுக்கப்பட்ட நிலையிலும் ரீல்ஸ் எடுப்பது, செல்ஃபி எடுப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு உயிரிழக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், இளைஞர் ஒருவர் அருவியில் விழுந்து உயிரிழந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Next Story

பிடிபட்ட அரிசி கொம்பன்; மகிழ்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்

Published on 07/06/2023 | Edited on 07/06/2023

 

arisi komban elephant happy theni kambam suruli tourist

 

கடந்த சில தினங்களுக்கு முன்பு தேனி மாவட்டம் கம்பம் பகுதிக்குள் புகுந்த காட்டு யானை அரிசி கொம்பன் வனத்துறையினருக்குப் போக்கு காட்டி வந்தது. இதையடுத்து மயக்க ஊசி செலுத்திப் பிடிக்க வனத்துறையினர் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து யானையானது கம்பம் அருகே உள்ள சண்முகா அணைப் பகுதியில் புகுந்து முகாமிட்டு வந்தது.

 

இதையடுத்து அரிசி கொம்பன் யானையின் நடமாட்டத்தால் சுற்றுலாப் பயணிகளின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் அபாயம் உள்ளதால் கடந்த 28 ஆம் தேதி முதல் தேனி மாவட்டம் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் வனத்துறையின் தொடர் முயற்சியின் பலனாக மயக்க ஊசி செலுத்தப்பட்டு அரசி கொம்பன் யானை பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் விடப்பட்டது. இதையடுத்து 10 நாட்களுக்குப் பின்னர் சுருளி அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதி வழங்கி கம்பம் வனத்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.