ADVERTISEMENT

கடலில் காணாமல் போன மீனவர்; 3வது நாளாகத் தேடும் பணி தீவிரம்

10:20 AM Jul 16, 2023 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

காரைக்கால் துறைமுகத்திலிருந்து கடந்த 14 ஆம் தேதி 100க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர். அந்த வகையில் காரைக்காலைச் சேர்ந்த பிரதாப் என்பவரின் விசைப்படகுகளில் மோகன், இளையராஜா, மணி, குமார் உள்ளிட்ட 15 பேர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

நேற்று மீன் பிடித்துக் கொண்டிருந்த போது கடலில் ஏற்பட்ட சீற்றத்தின் காரணமாக நாகை நம்பியார் நகரைச் சேர்ந்த தங்கசாமி என்பவர் படகிலிருந்து நிலை தடுமாறி மாமல்லபுரம் அருகே 12 நாட்டிகள் மைல் தொலைவில் கடலுக்குள் விழுந்துள்ளார். இதனைத் தொடர்ந்து சக மீனவர்கள் கடலுக்குள் விழுந்த தங்கசாமியை தேடினர். ஆனால் அவர் மாயமானதால், உடனடியாக கடற்படை, மீன்வளத்துறை மற்றும் கிராம நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவலின் பேரில் காரைக்கால் துறைமுகத்தில் 12க்கும் மேற்பட்ட படகுகளில் 100க்கும் மேற்பட்ட மீனவர்கள் கடலுக்குள் சென்று காணாமல் போனவரைத் தேடி வருகின்றனர். மேலும் அரசு சார்பில் விமானம் மற்றும் கப்பல் மூலம் தங்கசாமியைத் தேட வேண்டும் என்று மீனவர்கள் அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளனர். அதன் அடிப்படையில் இன்னும் அரசு சார்பில் விமானம் மற்றும் கப்பல் மூலம் காணாமல் போன மீன்வரை தேடும் பணிகளை அரசு மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT